பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா புதிதாக வாங்கிய சைக்கிள் மீது, ஒருவன் முகத்தில் பெருமை பொங்க, கம்பீரமாக ஏறி அமர்ந்து, ஒட்டிக் கொண்டு சென்றான். சைக்கிளை ஒட்டும் வரை, சைக்கிளும் ஓடும்வரை, சைக்கிளும் அழகாக இருந்தது. சைக் கிள் ஒட்டுபவனையும் பார்க்க அழகாக இருந்தது. உட்கார்ந்தபடி ஒட்டிய அவன், சைக்கிளை மிதிக்காமல் இருந்தான். சைக்கிள் நின்று விட்டது. அடுத்த நிலை என்ன? ஓடாத சைக்கிள் விழுந்து விட்டது. அது மட்டுந்தானா? அவனுந்தான்.