பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

45


தொழிலை வளர்க்க விரும்புபவர்கள் அதைத் தொழிலாகக் கொள்ள வேண்டும். பொழுது போக்கு அம்சம் என்று கருதி விடக்கூடாது.

பொழுது போக்கிடத் தொழில் என்றால், இறுதியில் அழுது வடியத்தான் நிலைமை வரும்.

தொழில் என்பது தெய்வம்.
உழைப்பு என்பது மதம்.
திட்டம் என்பது ஆலயம்.
சுறுசுறுப்பு என்பது பக்தி
நாணயம் என்பது நியமங்கள்
முயற்சி என்பது வேதங்கள்

இப்படி எண்ணுகிறவன் தான் தொழிலில் சிறக்க முடியும்.

பிறரை நம்பித் தொழிலை ஆரம்பிப்பவன் பேதை, பிறரை நம்பித் தொழிலை விடுபவன் பைத்தியக்காரன். பிறர் வந்து தொழிலை முன்னேற்றுவார்கள் என்று நம்புபவன் கோமாளி.

தனது உழைப்பை நம்புகிறவன், தனது உழைப்பில் வாழ்கிறவன் தான் முன்னேற முடியும்.

ஒரு விளையாட்டு வீரன் பந்தாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். பந்தை எங்கு நின்று அடிப்பது, அந்தப் பந்து போய் எங்கு விழும்? அதை எதிராளி எப்படி ஆடுவான்? அதை எப்படி எடுத்தாடுவது என்பதாக,