பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

தனது மனதுக்குள்ளே ஒரு மனோ பார்வையை (Mental Visuvalization) அவன் மனதில் வைத்துக் கொண்டு தான் ஆடுவான். அப்படித்தான் ஆடவேண்டும்.

அப்படி அவன் விளையாடா விட்டால், அவன் சிறந்த விளையாட்டு வீரன் இல்லை. அவன் சாதாரண விளையாட்டுக்காரன் தான். அவன் ஆயிரம் பேர்களில் ஆயிரத் தொன்றாகத்தான் இருப்பான். ஆயிரத்தில் ஒருவனாக அவனால் வரமுடியாது.

அதே போல, தொழிலில் ஈடுபடுபவருக்கும் இந்த மனோ காட்சிகள் வேண்டும். முன்னதாகத் திட்டங்களும், திட்டங்களை செயல்படுத்தும் கட்டங்களும் தெரிந்தாக வேண்டும்.

வரப்போகும் காரியங்களைப் பற்றிய வரன் முறைகள் தெரிந்திருக்க வேண்டும்.

தொழில் செய்வது நமக்காக, நமது முன்னேற்றத்திற்காக, நமது நல்ல வாழ்வுக்காக.

நமக்கு நாமே தான் உதவி செய்து கொள்ள வேண்டும்.

எந்த வேலையையும் முதலில் மனதுக்குள் போட்டு அலசிவிட வேண்டும். மார்க்கங்களையும், வழிமுறைகளையும், தீர்க்கமாகப் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.