பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வன். நிச்சயம் அந்தக் காரியத்தை நிறைவேற்றியே தீருவான். அது எப்படிப்பட்ட முடிவாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது பற்றி அவன் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவன்தான் காரியவாதி. கடமையே கண்ணானவன், கருமமே கருத்தாகக் கொண்டவன். முடிவு முழுமையானதாக, சிறந்ததாக (Perfection) இருக்க வேண்டும் என்பதில் கவலையில்லாத முனைப்புக் கொண்டு, தயக்கம் கொள்ளாமல் உழைப்பவன் அவன்.

ஏனெனில், ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்யச் செய்ய, அதில் பழக்கம் ஏற்படுகிறது. பக்குவம் உண்டாகிறது. தெளிவு கிடைக்கிறது. தேர்ச்சி நிலைக்கிறது. அதில் ‘பர்பெக்‌ஷன்’ தானாகவே பரிணமித்துக் கொள்கிறது.

எனக்கு ‘பர்பெக்‌ஷன்’ தான் வேண்டும். அப்பொழுதுதான் நான் அந்தக் காரியத்தை ஆரம்பிப்பேன் என்று யாராவது சொன்னால், அவன் காரியவாதி அல்ல... பேசிக் கொண்டே பொழுதைப் போக்கும் பயந்தாங் கொள்ளி ஆவான்.

பேசுவதிலேயே இன்பம் கண்டு, பேசுவதிலேயே பிறரிடம் மரியாதை பெற்று. காலப் போக்கில் கேலிக்குரிய மனிதனாகப் போகிறவன் அவன். எப்படியென்றால், தான் தொடங்கப் போகும் காரியம் வெற்றி தருமோ, தராதோ என்ற குழப்பங்களுக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருப்பவன்.