பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நமக்கு தனமே உதவி 53 அப்படி வருமானம் வராவிட்டால், எழுத்து இலட்சியப்பணி, தோற்றுவிட்டால், ஆலமரத்தடியில் - போய் தங்கியாவது பிழைத்துக் கொள்ளலாம். வாழ்வைப் பார்த்துக் கொள்ளலாம். அதற்கிடையில், வேறு ஒரு பணியில் ஈடுபடலாம் என்றெல்லாம் தோல்வி பற்றிய முடிவுக்கு மாற்று வைத்துக் கொண்டேன். அந்தப் பணியை உடனே விட்டுவிட்டேன். _ அப்பொழுது எனக்கிருந்த துணிவு ஒரு முடிவினை எடுக்கும் துணிவுதான். எழுத்துப் பணியை தொடர்வ தென்ற முடிவுதான். அந்த நோக்கத்திலே மிகவும் உறுதியோடு இருந்ததால், நுழைந்து பார்த்து நோகச் செய்த நலிவுகள் எல்லாம், வால்களை சுருட்டிக் கொண்டு வந்த வழியாக ஓடி விட்டன. ஆகவே, முடிவு எடுப்பது மட்டும் முக்கியமல்ல. அந்த முடிவுக்கு இறுதி வடிவம் வரும்போது ஏற்படுகின்ற விளைவுகளைச் சந்திக்கும் திறமைகளையும் இடை யிடையே இடைவிடாது வளர்த்துக கொள்ள வேண்டும் என்பதுதான். நல்லதோ கெட்டதோ வரும் முடிவுகளை ஏற்றுக் கொண்டு, மேலும் மேலும் செயலாற்றல் பெற விழைந்தால் போதும் தேர்ச்சிகள் தானாக வந்து சரணடைந்துக் கொள்ளும். * தடுமாறாத, தன்னம்பிக்கையுள்ள எண்ணங்களே நமக்குத் துணை வாழ்வுக்கு அந்தச் செல்வம் தான் முக்கியம். *