பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நமக்கு நாமே உதவி 57 சிறந்த பலமுள்ள একান্তজিলাত তাল জড়ীক্ত முடியும். சிந்தித்ததை செயல்படுத்த முடியும். - பயந்தாங்கொள்ளிகள், பலமற்ற பலவீன மனிதர்களால் ஆசைப்படத் தான் முடியும். அரங்கேற்றிக் கொள்ள முடியாது. பலம் என்றால் என்னவென்று நினைக்கின்றீர்கள்? மனோபலம். வெறும் உடல்பலம் மட்டும் போதாது. அதனுள்ளே உள்ள மன பலம் (Will Power). விடா சக்தி. இந்த விடாசக்தி என்கிற மனோபலம் சிறந்த தேகம் உள்ளவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. இதனால் என்ன நடந்து விடும் என்று நீங்கள் கேட்கும் வினா எனக்கும் கேட்கிறது. இத்தகைய விடா முயற்சியுள்ள மனோபலம் உள்ளவர்கள் இந்த உலகத்தார்களுக்கு ஏற்ற முறையில் வரவழைத்துக் கொண்டு, வடிவமைத்துக் கொண்டு விடுகின்றார்கள். இவர்களின் காலடியில் உலகம் காத்துக் கிடக்கிறது. இவர்கள் எண்ணியதை முடிக்கும் திண்ணியர்களாக வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கும் வாழ்ந்து காட்டுகின்றார்கள். ஆகவே, நாம் ஒன்றை மட்டும் நினைவு கொண்டே ஆக வேண்டும்.