பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
64
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

அவர்களைப் போல நாமும் ஓர் அலைக்குமிழாய் நுரைத்து, காற்றில் வெடித்துக் காணாமல் போவதற்குத்தானா நாம் இந்த அற்புதமான மனிதப் பிறப்பை எடுத்திருக்கிறோம். இல்லையே!

எல்லாரும் புகழ்வது போல ஓர் அற்புதமான காரியத்தை செய்து புகழ் பெறுவதுதான் நமது தலையாய நோக்கம். “தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது தானே அந்த லட்சியம்!

புகழ் பெறுவது என்பது உயர்ந்த பணியில், ஒப்பற்ற செயலால், திரண்ட செல்வத்தால், தர்மத்தால், தன்னிகரில்லாத தொண்டினால் என்று எத்தனையோ வகைகளில் கிடைக்கும்.

அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்வதுதான் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பெரிய கடமையாகும்.

எனக்கு அந்த திறமையே இல்லையே! எனக்கு அப்படி ஒரு வாய்ப்பும் இல்லையே! எனக்கு எந்த விதமான வசதியும் இல்லையே! என்று பேசிக் கொண்டே கிழமாகிப் போய் மறையும், பேர் வழிகள் தாம், பிரபஞ்சத்தில் பல கோடி மக்களாக இருக்கின்றார்கள்.

இப்படி ஒரு வாழ்க்கைமுறை இருக்கிறதா? அதற்கு இப்படி வழி வகைகள் உண்டா? நானும் முயற்சித்து பார்க்கிறேனே! என்று முனையும் மக்கள் தான், முன்னேறி வருகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தாம்