பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உழுகின்ற காலத்தில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருப்பவர்கள். மற்றவர்கள் அறுவடை செய்கின்ற காட்சியைப் பார்த்து அழுது கொண்டு தவிப் பார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதேயில்லை. இன்றைய சோம்பேறி நாளைய பிச்சைக்காரன். இந்தப் பழமொழியை யாரும் மறந்து விடக்கூடாது. நமது தகுதியை எண்ணி ஆராய்ந்து, 'இதுதான் என வரையறுத்து முடிவுசெய்து கொண்டு, இப்படித்தான் நடக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, கஷடங்களைப் பொருட்படுத்தாமல் காலத்தைப் பயன் படுத்தி உழைப்பவனே கர்ம வீரனாக, கலங்காத தீரனாக மாறுகிறான். நமது உழைப்புக்கோ, முன்னேற்றத்திற்கோ மற்றவர்கள் வந்து உதவி செய்வார்கள். உயரும் வரை அருகில் நிற்பார்கள்; நமது வெற்றியில் மற்றவர்கள் மகிழ்வார்கள் என்பன போன்ற எண்ணங்களை, நாம் கொஞ்சங் கூட நினைக்கக் கூடாது. நம்பக் கூடாது. எதிர்பார்க்கவும் கூடாது. மேல் நாட்டுப் பெண்மணி ஒருவர், நம் நாட்டிற்கு வந்து நான்கைந்து ஆண்டுகள் தங்கியிருந்து விட்டு, தனது தாய்நாட்டுக்கு மீண்டும் செல்கிறபோது. அவரை ஒருவர் விசாரித்தாராம். எங்கள் இந்தியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று: