பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நமக்கு நாமே உதவி 67 மிகவும் நல்லவர்கள். பயபக்தியுள்ளவர்கள் என் றெல்லாம் வருணித்த அந்தப் பெண்மணி, இறுதியாக ஒரு கருத்தைக் கூறினார்களாம். 'யாராவது அடி மட்டத்திலிருந்து மேலே உயர முற்படும் போது, அனுதாபத்துடன் ஆதரவு தந்து உதவி செய்வார்கள். அவர் முன்னேறத் தொடங்கிவிட்டார் என்று அறிந்து கொண்டால், அவரை எல்லோரும் சேர்ந்து அழுத்தி விடுவார்கள் என்று அந்த மங்கை திருவாய் மலர்ந்ததாக ஒரு செய்தி பத்திரிக்கையில் வந்தது. அனுதாபத்துக்காக பிறர் தம்மைப் போற்ற வேண்டும் என்பதற்காக உதவ முற்படுபவர்கள் சிலர். பலரோ, மற்றவர்கள் முன்னே உதவுவதுபோல் பாசாங்கு செய்து விட்டு, பிறகு பின் வாங்கி விடுவார்கள். தோற்றுப் போக வேண்டிய விதங்களிலெல்லாம் மறைமுகமாக வேலை செய்து விடுவார்கள். இதுதான் உலக நியதி. ஒருவரது துன்பத்தைக் கேட்டு வருந்துவதுபோல் மகிழ்கிற கூட்டம் தான் சமுதாயமாக இருக்கிறது. ஒருவரது இன் பத்தினைக் கேட்கவே யாருமே வரமாட்டார்கள். ஏனெனில், மனித குலத்தின் வாடிக்கையோ, பொறாமை குணத்தில் தான் பொசிங்கிக் கொண்டு கிடக்கிறது.