பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமக்கு நாமே உதவி 69 ஏறும் சாமர்த்தியம் இருந்தால் ஏறிப் பார்ப்பான் இல்லையென்றால், யாரும் இறக்கி விடாமலேயே அவனே கீழே சரிந்து வீழ்ந்து கிடப்பான். மரம் ஏறத்தெரிகிற திறன், மரம் ஏற முடியும் என்ற நம்பிக்கை எப்படியும் ஏறி விடுவேன் என்ற வைராக்கியம் மரத்தின் உச்சிக்குப் போய் விட வேண்டும் என்கிற இலட்சியம். அதனை மறிக்க வருகின்ற கவக்டத்தை முறியடிக்கும் மனோபலம். இத்தனையும் இருந்தால் அவன் மரத்தின் உச்சிக்கு ஏறிட முடியும். அப்படிப்பட்ட சாமர்த்தியம் தான் வாழ்க்கைக்கும் வேண்டும். o மரத்தின் உயரத்திற்கு ஏறி கனிகள் பறிப்பதுபோல, வாழ்க்கை மேம்பாட்டுக்கு வந்து, புகழைப்பெறுவதுதான் நமது இலட்சியம். கூக்குரலிட்டுக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்குள்ளே போய், சத்தமிட முடியாது மெளனியாகப் போகிறான் ஒரு மனிதன். இதுதான் தற்போது சமுதாய தர்மமாக இருக்கிறது. பேச்சுகளுக்கிடையே சத்தமிட்டுப் பேச முடியாது. ஊமையாகிப் போகிறவன் போல, வாழ்க்கைக் கஷடங்களுக்கிடையே மனிதன் வலிமையுடன் முன்னேற முடியாமல் மனம் புழுங்கி தவிக்கிறான். தளர்கிறான்.