பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கொண்ட பணந்தான், இன்று உலகத்தை ஆட்டுவிக்கின்ற திரண்டதோர் தெய்வீக சக்தியாக விளங்குகிறது.

‘கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ என்ற பாடல் வரி, இப்பொழுது முனைமழுங்கிய கத்திபோல, வலுவு இழந்து தவிக்கிறது.

‘இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்று எடுத்தத் தாயும் வேண்டாள், செல்லாது அவன் வாய்ச் சொல்’ என்ற பாடல் தான் இன்று உண்மையாகத் தெரிகிறது. திரிகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம். தன் கையெழுத்துப் போடக்கூடத் தடுமாறும் குடும்பம் அது. வெளியில் போய் சொன்னால்கூட மற்றவர்கள் வெறுத்து ஒதுக்குகிற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவன். தெரு நடை பாதையில் சிறுகடை ஒன்றை ஆரம்பித்தான். சொற்ப ஜீவனம், அற்ப ஜீவனந்தான். அவனது அதிர்ஷடம், தனது தொழிலைத் தொடங்கி விட்டது. நடைபாதை கடை வியாபாரம் செழித்துக் கொண்டது. பத்தே ஆண்டுகளில் அவனது குடும்பம் பணக்காரக் குடும்பம் ஆகிவிட்டது. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் அப்படியே தலைகீழாக மாறி விட்டனர்.

அதுமட்டுமா? அவர்களை அலட்சியப்படுத்திப் பேசி, மதிப்புத்தர மறுத்த அக்கம் பக்கத்தார், சுற்றத்தார் கூட எல்லாமே மாறி விட்டனர்.

அவர்களைப் பார்த்த இடத்தில் பணிவான வணக்கம். பேசும்போது குழைவு. பக்கம் வந்தால் தாழ்வு,