பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

89


நமக்கு உதவுகின்ற வகையில், பலன்கள் பெறுகின்ற வழியில் நமது சிந்தனைகளும் செயல் முறைகளும் விளங்க வேண்டும்.

5. தடைகளை உடைக்கும் ஆற்றல்

அமைதியான கடலில் கப்பல் விடுவதென்றால், எல்லோராலும் தான் முடியும் கொந்தளிக்கும் சூறாவளியில், மலை உயரம் எழும்புகிற அலைகளுக்கிடையில், கொட்டும் மழையில், கப்பலைச் செலுத்துவது என்பது தேர்ந்த மாலுமிகளால், நல்ல கப்பல் தலைவர்களால் மட்டுமே முடியும்.

அதுபோலவே, சாதாரண நேரங்களில், சமர்த்தாகப் பேசி, சாதுர்யமாக வேலைகளை முடித்து விடுவோம் என்பது சாமான்ய மனிதர்களாலும் முடியும்.

தவிர்க்க முடியாத தடைகள், குழப்பிவிடுகின்ற குயுக்திகள், சதித்திட்டம் போல் விளங்கும் சந்தர்ப்பங்கள், மீறி வர முடியாத அளவுக்குப் பிரச்சினைகள். இவற்றிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதுதான் வீரத்திற்கு அழகாகும். விவேகிகளின் செயலுமாகும்.

ஆகவே, எதிர்ப்புக்களைக் கண்டு இடறி விழாத பண்புள்ளவர்கள். அவற்றை எத்தி உதைத்துவிட்டு, பாதையை ராஜ பாதையாக ஆக்கிக் கொள்பவர்களால் தான் வெற்றியாளர்களாக விளங்க முடியும். வாழ்வையும் வெற்றி கொள்ள முடியும்.

6. நாவும் நயமும்

அன்பு தான் உலகை ஆள்கிறது. அன்பான சொல் தான் கேட்பவரை மகிழ்விக்கிறது. அன்பான நடத்தையே