பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 டன்கடன. எல. நவராஜ செல்லையா _ ஆகவே, நாணயத்தை வெளிப்படுத்தும் சொற்களைப் பேசுவதும், அவற்றைக் கண்ணியத்துடன், கடமை உணர்வுடன் காப்பாற்றிக்கொள்வதும். முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவனவாகும். 8. சிக்கனமும் செலவும் ஒருவர் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார் என்பதில் அல்ல பெருமை. அவர் எவ்வளவு சேர்த்து வைக்கிறார் என்பதில்தான் பெருமை. ஆயிரம் ரூபாய் ஒரு மாதத்திற்கு சம்பாதித்து விட்டு 1200 ரூபாய் செலவு செய்பவரை விட, மாதத்திற்கு 500 ரூபாய் சம்பாதித்து, 50 ரூபாய் சேர்த்து வைப்பவரே சிறந்தவராவார். ஒரு பைசா கூட ஒரு நாளைக்கு சேர்த்து வைக்காதவர் பணக்காரர் ஆகிடுவார் என்கிற பேச்சுக்கு இடமேயில்லை. இன்றைய செலவாளி நாளைய பிச்சைக்காரன் ஆவான். பணத்தால் மட்டும் தான் சேர்க்க முடியுமா? உடலாலும்தான். உடல் சக்தியை ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள், உருக்குலைந்து போயொழி 6].!ff [T556ïT. இன்றைய உடல் சக்தியை, இளமை சக்தியைச் சேர்த்துவைக்காமல் சீரழிக்கிற செலவாளி, நாளைய நோயாளியாவான் என்பதற்கு சந்தேகமே இல்லை. நீங்கள் பெரும் பணக்காரர்களைப் பார்த்திருப்பீர்கள். பணத்தை சிக்கனப்படுத்தத்