பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நமக்கு நாமே உதவி 95 எல்லோரும் ്ഞതു எண்ணிக் கொள்ள வேண்டும். நன்னெறி நூலை நமக்கு நல்கி, நல்ல புகழிற்கு உரிய குமரகுருபர சுவாமிகள் என்பவர், கோடிட்டுக் காட்டிய குறிப்பொன்று, இவ்வாறு அமைகிறது. நீரில் குமிழியாய் இளமை இருக்கிறது. நீரில் திரளும் அலைகள் போல் செல்வம் இருக்கிறது. நீரில் எழுதிய எழுத்து போல்தான் நிலவுகிற நமது வாழ்க்கை இருக்கிறது. நொடியில் ஒடிந்து, மறைந்து போகிற நூதனத் தன்மைதான் நமது வாழ்வமைப் பாய் விளங்குகிறது. நில்லாத வாழ்க்கை, மனிதர்க்கெல்லாம் நிலையாத வாழ்க்கை என்கிற இதுபோல் நினைவுகளை சற்று தூரம் எறிந்துவிட்டு, அணையாத ஜோதியாக' வாழ்வை ஏற்றிப் பார்க்க, உங்களை யெல்லாம் பெருமையுடன் அழைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் திறமை இருக்கிறது. உண்மை நிலை இதுதான். தமது திறமையை தகுதியுடன் வளர்த்துக் கொண்டு, தான் உயர்ந்து கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கும் தொண்டு செய்கிற சக்தியும் சாமர்த்தியமும் சமுதாயத்தில் பிறந்த எல்லோர்க்கும் உண்டு. எப்பொழுதும் போய் விடுவோம்’ என்ற எண்ணத்தைத் தள்ளிவிட்டு, இருந்து என்ன புண்ணியம் என்ற கீழ் நினைவை கிள்ளிவிட்டு; இருக்கும் வரை சிறப்பாக வாழ வேண்டும் என்கிற வேட்கையை வளர்த்து விட்டு, நீங்கள் வளமோடு வாழ வேண்டும். வழியறிந்து உழைக்க வேண்டும். வள்ளல்களாகப் பிழைக்க