பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்திபாயும் அவர்தம் - புதுமுறை வாழ்க்கையும் - ." தேவ்ருக் என்னுஞ் சிற்றுாரில் வாழ்ந்துவந்த பாலகிருஷ்ண ஜோஷியார்புதல்வியர் மூவரும் இளமையிலேயே கைம்பெண்களான வரலாற்றினை நீங்கள் முன்னரே அறிந்திருக்கிறீர்கள். அம்மூவருள் இளேயமகளாராய பார்வதிபாய் ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகளாவது தம் கணவனரோடு வாழ்ந்து இல்லறம் கடத்திக் குழந்தைகளையும் பெற்ருர். மூத்த மகளாராய யசோதாபாய் குழந்தைகளைப் பெருவிடினும் தம் கணவனுரோடு சிறிது காலமாவது வாழ்ந்திருந்தார். இவ்விருவருக்கும் இடையே பிறந்த ஆனந்திபாயோ ஒருகாளேனும் தம் கணவனருடன் வாழ்ந்தறியார் : திருமணம் ஆன அந்த ஒன்பதாம் வயதிலேயே கைம்பெண் ஆனவர். இந்த அம்மையாரைக்குறித்து அந்தக் குடும்பத்தில் அனேவருக்கும் கவலே மிக்கிருந்தது. = * . கைம்பெண் மறுமணச்சட்டம் 1858-ஆம் ஆண்டிலேயே நிறைவேறியிருந்தும் அது நடைமுறையில் பரவவேயில்லை. அறிஞர் இரானடே, டாக்டர் பந்தர்கார் போன்ற சீர்திருத்தக்காரர்கள் அவ்வப்போது மாநாடுகள் கூட்டிப் பெரிதும் கிளர்ச்சி செய்துவந்தார்கள். இத்தகைய கூட்டம் ஒன்றினுக்குப் பாலகிருஷ்ண ஜோஷியும் சென்றிருந்தார். அப்போது அங்குள்ளோர் கைம்பெண்மறுமணத்தைக்குறித்து மிக அழகாகவே பேசிஞர்கள். நம் ஜோஷிக்கும் அது உடன் பாடாகவே இருந்தது. ஆயினும், செயல்முறையில் இயலாதவராய்த் துன்புற்றவண்ணம் இருந்தார். அவர்புதல்வர் 5ரஹரி ஜோஷிக்கும் கைம்மைமறுமணத்தில் பெரிது விருப்பம்