பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 பார்வகிபாய் அதவலே சீர்திருத்தக்குழுவினருள் சேர்க்கலாம். எனினும், அவர்களைப்போல் அவ்வளவு முற்போக்கில் அவர் செல்லுவதில்லை. ஒருமுறை பம்பாயில் சீர்திருத்தமகாகாடு ஒன்று கடந்தது. அதில் நம் அம்மையாருக்கும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர், இக்காலத்தில் படித்த பெண்கள் பலர் எதற்கும் மேல்நாட்டினரின் பழக்க வழக்கங்களையே பின்பற்றுகின்றனர். ஆடையைக் குறித்த வகையில் அவர்களைப் பின்தொடர்வது பெரிதும் தவறு” என்று அவர்களேயே கண்டித்துக் கூறினர். எனினும், மிக்க தீவிரமான சில சீர்திருத்தக்காரர்கள் தவிர, மற்றையோர் அனைவரும் அம்மையார் கூறியதே உண்மை என்று கூறினர். கைம்பெண்இல்லத்துக்குப் பொருள் தொகுப்பதற்காக அங்கே இருந்த இளைஞர்கள் பலர் தங்கள் தொப்பிகளைக் கழற்றிக்கொண்டு பலரிடமும் சென்று பொருள் பெற்று வந்த பார்வதிஅம்மையாரிடம் கொடுத்தனர். அந்தப் பொருளும் இட்டக்கூடிய தொகையாகவே இருந் தது. - * * கைம்பெண்கள் தலைமழித்துக்கொள்ளும் பழக்கத்தை 5ம் அம்மையார் அறவே வெறுத்தார்; மனுதருமசாஸ்திரத்தைத்தவிர வேறு எங்கும் அது கூறப்பட வில்லையே ' என்று நம் அம்மையார் தாம் செல்லும் இடங்களில்எல்லாம் கூறினர். ஆல்ை அவர்மட்டும் மழித்த தலையினராயே இருந்துவந்தார். தம் புதல்வருக்குத் தக்க வயசு வந்து, தம் தாயார் சொல்வது நியாயமானதே என்று அறிகிறவரையில் அவ்விதம் தலமழித்திருக்க வேண்டும் என்று அவர் எண்ணினர்