பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்ப்பல கிக ழ்ச்சிகள் 49 சேர்வோர் முதலில் செய்யவேண்டிய உறுதிமொழி வருமாறு: -

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய யாவும் வல்ல இறைவன்திருமுன்பு நின்று கான் கூறும் உறுதிமொழிகளாவன: நம் காட்டுப் பெண்களின் முன்னேற்றத்துக்கு இப்போது புரியவேண்டிய செயல்களுக்காக நான் என்னையே இக்கழகத்துக்கு முற்றிலும் உரிமையாக்கி விடுகின்றேன். இன்றுமுதல் நான் என் வாழ்க்கையின் நலத்தைக்குறித்துச் சிறிதும் கவலே கொள்ள மாட்டேன். இக்கழகம் என்னே எத்தகைய தொண்டுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். என் உயிர்வாழ்க்கைக்கும் என் குடும்ப நடைமுறைகட்கும் இக் கழகம் என்ன தொகை தருகின்றதோ அதனே நான் ஏற்றுக்கொண்டு உழைக்கத் துணிவுகொண்டிருக்கிறேன். இது முற்றிலும் உண்மை, உண்மை. '

. ஏறத்தாழ இத்தகைய தன்மையிலேயே அவ் வுறுதி மொழி அமைக் துளது. முதலில் நம்:பெரியார் கார்வே அக் கழகத்தினர்.முன்னிலையில் உறுதிமொழி கூறினர். பின்னர் அங்கே கூடியிருந்த மற்றையோர்களும் அவ்விதமே உறுதிமொழி கூறினர். அங்கே கூடியிருந்தவர்கள் பத்துப்பன்னிருவருக்குமேல் இல்லை. கம் பார்வதிபாயும் அவர்தம் அருமைமைந்தரும் அக்குழுவினைச் சார்ந்தவரேயாவர். நம் பெரியார் எவரையும் வற்புறுத்தவில்லை. நம் அம்மையாரும் அவர்தம் புதல்வர் நாராயணரும் அவர்களாகவே முன் வந்து வலிய உறுதிமொழி கூறினர். நாராயணர் அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அவர், தம் உறுதிமொழிப்/டியே எம். ஏ. பட்டம் பெற்றும் எத்தகைய உயர்ந்த 4