பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f அம்மையார் அயல் நாடு சென்றது 58 ஏற்பட்டது 5ம் அம்மையாருக்குப் பேராதரவாய் இருந்தது. கப்பலில் சென்ற முதல்காளே நம் அம்மையாருக்குப் பல துன்பங்கள் நேரலாயின. நாற்காலியில் அமர்ந்து மேசையின்மீது உணவுவைத்து அருந்தும் பழக்கம் பார்வதியாருக்குப் பொருந்தவில்லை. அவர் முள்ளேயும் கத்தியையும் பார்த்துத் திகைத்தார். அங்கே மரக்கறி உணவு இல்லாமையால் ரொட்டியையும் பழத்தையுமே அவர் உட்கொள்ள வேண்டியவரானுர். கப்பல் முதலில் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தது. பிறகு அது சிங்கப்பூர், ஹாங்காங் சென்று, முடிவில் டோக்கியோவை அடைந்தது. அங்கிருந்து அம்மையார் - வேறு கப்பலில் ஏறி அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். கப்பற் பழக்கம் இன்மையால் அம்மையார் காய்ச்சலால் வருந்தினர். கப்பல்மருத்துவர்உதவியால் அந்தக் காய்ச்சல் ஒருவாறு நீங்கியது. சு கப்பலில் செல்லச்செல்லக் குளிர் அதிகரிக்கத்தொடங்கியது. தாம் குளிர்காட்டுக்குச் செல்லுதலே அமமையார் சிறிதும் உணர்ந்துகொள்ளாமலே புறப்பட்டுவிட்டார். கோயில் குளங்களுக்குச் செல்லுபவர்போல் பார்வதியார் பட்டுப்புடைவைகளோடு பயணங்கொண்டார். ஆதலால் அவர் அமெரிக்காவில் ஸான்பிரான்சிஸ்கோ துறைமுகத்தை விட்டு ஊரை அடைக்தவுடனே குளிர்காய்ச்சலால் பெரிதும் துன்புற்ருர். அம்மையாரால் அடியெடுத்து வைக்கவும் இயலவில்லை. தர்மானந்தரோ குறித்த ஒருகாலத்திற் கல்லூரிக்குச் இசல்லவேண்டியவர். ஆதலால் அவர் அங்கே உள்ள f