பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பார் வதிபாய் அதவலே யாரின் துன்பகிலேயினைப் பல அன்பர்களுக்குத் தந்திமூலமாகத் தெரிவித்தார். ஒருநாள் பார்வதிஅம்மையார் தமது நிலையினை கினேந்து துன்புற்றவண்ணம் தாழ்வாரத்தின்கீழ் அமர்ந்திருந்தார். அப்போது மூன்று இந்திய இளைஞர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். இந்தியர் என்னுஞ் சொல்லேக் கேட்டதும் கம்.அம்மையார் இன்முகம் கொண்டார். அவர்கள் மூவரும் மகாராட்டிரமொழி தெரிந்தவராய்த் தம் ஊரினராய் இருப்பதை அறிந்ததும் நம்அம்மையாருக்கு அளவிலா மகிழ்ச்சி பொங்கியெழுந்தது. பிரமனும், திருமாலும், சிவனுமே இவ்விதம் உருவெடுத்து வந்தனரோ என்று ஐயுறவும் கொண்டார். அவர்கள் தம் தாய்மொழியில் பேசிய பேச்சைக் கேட்டதும் நம் அம்மையாருக்குக் காது குளிர்ந்துவிட்டது. பார்வதியார் அவர்களே அன்போடு வ ரவேற்று உபசரித்தார். அங்குக் கிறிஸ்தவ முதுமகளிர்கட்கு இளைஞர் மூவரும் பல பொய்க்காரணங்கள் கூறி, நம் பார்வதிஅம்மையாரைத் தங்கள் இடத்துக்கு அப்போதே அழைத்துக்கொண்டு போய்விட்டனர். பார்வதியார் அந்த மூவருக்கும் உணவு சமைத்துப் போடும் வேலேயில் இருந்தார். அவர்களோடு இருப்பது அம்மையாருக்கு முதலில் நன்மையாகவே தோன்றியது. பிறகு அவர் அவ்விடத்தையும் விட்டு நீங்கவே எண்ணிர்ை. அவர்கள் மூவரும் மிக எளியவாழ்க்கை கடத்துகின்றவர்கள். பொருள்வருவாயோ மிகக் குறைவு. அவர்கட்குக் காலை மாலை முற்றிலும் வேலே. ஆங்கிலம் கற்பிக்க அவர்கட்கு ஒழிவே ஏற்படவில்லை. வீட்டிலும்