பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பார்வகிபாய் அகவலே தார். ஆயினும் பி றருக்குத் துன்ப த்தைக் கொடுத்துக்கொண்டிருக்க அம்மையார் விரும்பவில்லை. கோகலே வேலேயின்மை' என்பது குறித்து ஒரு நூல் எழுதி அதனே அச்சிட்டுப் புத்தகவடிவில் வைத்திருந்தார். சிறிதும் விலையாகாமல் இருந்த அந்தப் புத்தகங்களே விற்றுக்கொடுத்தாவது அவருக்கு உதவிசெய்ய கம்அம்மையார் எண்ணினர். பார்வதியார் அப்புத்தகங்களுள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வீடுதோறும் சென்று விற்பனைசெய்ய முயன்ருர். அவ்விதம் பெரிதும் முயன்றும் காற்பது பிரதிகளே விற்பனையாயின. கோகலே மின்சாரத்தொழிற்கூடத்தில் ஒர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவரிடம் ஆங்கிலம் கற்றல் இயலாத செயல். ஆதலின் இவை பலவும் நோக்கி, கம்அம்மையார் தமக்கென ஒர் இடம் தேடலாயினர். புத்தகம் விற்கத் துவங்கும்போது பார்வதிஅம்மையாருக்குப் பல இடங்கள் தெரியவந்தன. அதன்மூலம் ஒருவர்வீட்டில் வேலையாள் தேவை என்பது அறிந்து, . கம் அம்மையார் அங்கே சென்ருர். அந்த வீட்டில் அவர் சுமார் ஒன்றரை மாதம் வேலைசெய்ய நேர்ந்தது. ஆயினும் அதற்குள் அவர்கள் பெரிதும் மகிழ்ந்து கம்அம்மையாருக்கு ஒரு நன்மதிப்பிதழ் ஈந்தனர். அந்த கன்மதிப்பிதழ் கொண்டும், வேறு பிற இடங்களில் தொழில் புரிந்த பழக்கம் தெரிவித்தும் பார்வதிஅம்மையார் அங்கே உள்ள ஒரு பெரிய மருத்துவச்சாலையில் பீங்கான்தடடுக்கள் கழுவும் பணியினைப் பெற்ருர். அந்த வேலைக்குச் செல்ல முயலும்போது கம் அம்மையாருக்குப் பித்தசம்பந்தமான ஒரு கோய் கண்டது. ஆயினும், அவர் அதனைப் பொருட்படுத்