பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையார் அயல் நாடு சென்றது 59." தாமல் அவ்வேலைக்குச் சென்ருர். அந்தக் கட்டடத்தின் அமைப்பும் பிற ஒழுங்குகளும் பார்வதிஅம்மையாரைப் பெரிதும் வியக்கச்செய்தன. அம்மையார் அதுவரையில் அத்தகைய ஒர் அமைப்பினேக் கண்டதேயில்லே. அங்குப் பார்வதியாருக்குக் கிடைத்த வேலை பெரிதும் துன்பமானதாகவே இருந்தது. தட்டுக்கள் கழுவுவதில் பெரிதும் பழக்கம் பெற்றவர்களும் அங்கே திணறிவிடுவார்கள். தட்டுக்களோ அளவற்றவைகள். அதனோடு அதிலிருந்து எழும் காற்றம் கம் அம்மையாரால் சிறிதும் பொறுக்கமுடியவில்லை. பலமுறை அவர் அங்கே வாய் குமட்டலோடு வருந்தினர். அவருக்கு அப்போதிருந்த பித்தஅதிகரிப்பே அதற்கு முதற்காரணம். - ஒருநாள் 5ம் அம்மையார் பெரிதும் வருந்தித் தம் தொழிலைப் புரிந்துகொண்டிரு ந்தபோது திடுமென மயக்கமுற்று அங்கே சாய்ந்துவிட்டார். பிறகு நிகழ்ந்த செயல் ஒன்றேனும் அம்மையாருக்குத் தெரியாது. மயக்கம் தெளிந்து நம் பார்வதியார் கண்திறந்து பார்த்தபோது, தாம் அந்த மருத்துவச்சாலையில் அங்குள்ள பிணியாளர்களுள் ஒருவராகப் படுக்கையிற் கிடத்தலை உணர்ந்தார். வேலை செய்யப் போக்த இடத்தில் தாமும் ஒரு நோயாளியாகக் கிடக்க நேர்ந்தது. எண்ணி அம்மையார் பெரிது வருந்தினர். அங்கே வேலையில் இருந்த ஒரு பெண்மணியார் பார்வதியார்மீது மிக்க இரக்கம் வைத்து, 'அம்மா, உயர்ந்த குலத்தில் பிறந்த உங்களுக்கு இத்தகைய வேலைகள் சிறிதும் பொருந்தா' என்று கூறி, தமக்குத் தெரிந்த ஓர் இடத்தில் அவருக்கு வேறு வேலே தேடிக்கொடுத்தார்.