பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையார் அயல் நாடு சென்றது 6 * வரும்படி மிஸ் ஒ ரெய்லி அழைத்தார். அம்மையா ரிடம் பொருள் இன்மை அறிந்து, தாமே பொருளும் உதவிப் பார்வதியாரை அங்கே அழைத்துச்சென்ருர். அந்த மாகாடடில் நம் பார்வதியார் தம் மகாராட்டிர மொழியில் பேசினர்; ரெய்லி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதிலிருந்து அவர்கட்கு நட்பு அதிகரித்தது. பார்வதி அம்மையார் மிஸ் ரெய்லிவீட்டிலேயே தங்கிவிட்டார். மிஸ் ஒ ரெய்லி என்பவரும் அயர்லாந்து காட்டினரே. அவர்தாயார் இளம்பருவத்திலேயே கைம்பெண் ஆகியும் வேறுமணம் செய்துகொள்ளாமலே தையல்வேலே செய்து தம் குழந்தையை வளர்த்தவர். ரெய்லிக்கு அப்போது ஐம்பத்தொரு வயது. அந்த அம்மையார் திருமணம் செய்துகொள்ளாமலேயே பொதுநலப் பணியில் ஈடுபட்டு வந்தார்; அவர்தம் வாழ்க்கைநெறி, அவர் புரியுங் தொண்டுகள் யாவும் கம் அம்மையாருக்குப் பெரிய படிப்பனையாய் இருக்தன. பார்வதியார் ரெய்லியின் தாயாரிடம் ஆங்கிலபாடம் முதலிலிருந்து ஒழுங்கு பெறக் கற்கத் துவங்கினர். ரெய்லி கம் அம்மையாரை அங்கே உள்ள பல தொழிற்சாலைகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று அவை நடைபெறும் முறைகளையும் விளக்கினர். ரெய்லிஅம்மையார் உதவியால் பார்வதியார் இந்தியர் வாழும் இடங்களுக்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றிக் கைம்பெண் இல்லத்துக்குப் பொருள் தொகுத்தார். அதல்ை சுமார் மூவாயிரம் ரூபாய்கள் சேர் ந்தன.