பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதிபாய் அதவலே தொடக்கம் திருவும் திறலும் உடையவரே உயர்வடைவர் என்பதில்லை. ஊக்கமும் உழைப்பும் உடையவரும் உயர்நிலை பெறுவர் என்பதைப் பார்வதிபாய்அம்மை யார் வர லாற்ருல் நீங்கள் அறியலாம். கல்வியில் பெரிதம் பிற்போக்கில் உள்ள மானுக்கர்களும் நம் அம்மையார்சரிதத்தால் கல்லுணர்ச்சி யுற்று முற்போக்கில் விளங்குவர். - s - == பார்வதிபாய் அம்மையார் நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்த்த ஒர் எளிய பெண். இவர் இருபத்தைந்து வயசுவரை எழுதப் படிக்க அறியாதிருந்தவர். உழைப்பைத் தவிர வேறு எத்தகைய நலனும் இவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. இவ் வம்மையார் அந்த உழைப்பினலேயே ஊழையும் உப்பக்கம் கண்டார்; கற்கும் பருவம் கடந்த பின்னர்க் கல்வி கற்கத் தொடங்கினர் ; மேல்நாடுகளுக்கும் சென்ருர் : உயரிய பட்டம் பதவிகள் பெருவிடினும் அறியவேண்டுவன பலவும் அறிந்தார் : புத்தம்புதிய உணர்ச்சிகளைப் பெற்ருர் , பொதுகலப் பணிகள் புரிந்தார். இவரால் பல இளங்கைம்பெண்கள் முன்னேற்றம் உற்றனர். கம் பார்வதிஅம்மையார்சரிதத்தோடு மற்றுமொரு பெரியார்சரிதமும் தொடர்புண்டு நிகழும். பெண்களின்