பக்கம்:நம் நேரு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

9


அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தான் மன்னனின் அழைப்புக்கு இணங்கி, டில்லி வந்து சேர்ந்தார்கள். ராஜ்கால் என்பார் மன்னனிடமிருந்து ஜாஹீரும் வீடும் இனாமாகப் பெற்றார். கால்வாய் ஒன்றின் கரையிலே அமைந்திருந்தது அந்த இடம். ‘நேஹர்’ என்றால் கால்வாய் எனப் பொருள்படுமாம். கால்வாய்க் கரை ஓரமாக வசித்த வீட்டார் என்பதைக் குறிப்பிட ராஜ்கால் பெயருடன் ‘நேஹரு’ என்பதும் கூடியதாம். ‘கால்’ என்கிற குடும்பப்பெயர் ‘கால்-நேரு’ என மாறியது. காலப்போக்கில் நேரு என்பதே குடும்பப் பெயராக நிலைத்துவிட்டது.

ஜவஹரின் முப்பாட்டனார் லஷ்மிநாராயண நேரு என்பவர் டில்லிச் சக்கரவர்த்தியின் அரசவையில் ‘சர்க்கார் கம்பெனி’ வக்கீலாகப் பதவி வகித்து வந்தாராம். 1857-ல் முதல் இந்தியப் புரட்சி நிகழ்வதற்குச் சிறிது காலம் முன்பு வரை, ‘டில்லிக் கொத்தவால்’ ஆகப் பணியாற்றிய கங்காதரநேரு என்பார் நம் நேருவின் பாட்டனார் ஆவர்.

இந்தியப் புரட்சி, நேரு குடும்பத்தினருக்கு டில்லி ராஜ்யத்துடன் இருந்த தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில், நேரு குடும்பத்தினரின் பத்திரங்களும் மதிப்பு மிக்க பொருள்களும் அழிந்துபோயின. நேரு குடும்பத்தார் டில்லியிலிருந்து ஆக்ரா நகருக்குக் குடியேற நேர்ந்தது.

ஆக்ரா நகரில்தான் ஜவஹர்லால் நேருவின் தந்தையார் பண்டித மோதிலால்நேரு 1861-ம் ஆண்டு மே மாதம் ஆறாம் நாளில் பிறந்தார். அதே நாளில்தான் இந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/12&oldid=1361854" இலிருந்து மீள்விக்கப்பட்டது