பக்கம்:நம் நேரு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நம் நேரு

வதை வழக்கமாகக் கொண்டாராம். இதனால் அவர் கல்லூரிப் பட்டம் பெற முடியாமல் போயிற்று.

மோதிலால் நேரு சமூகத்தில் காலூன்றி வாழ்க்கையில் சிறப்பாக முன்னேற ஆசைப்பட்டார். ஆகவே அவருடைய நோக்கு இயல்பாகவே வக்கீல் தொழில்மீது திரும்பியது. அன்றைய இந்தியாவில் இந்தியரின் முழுத் திறமைக்கும் இடமளிக்கக் கூடிய ஒரே தொழில் அதுவாகத் தானிருந்தது. வெற்றி காணும் ஆற்றல் பெற்றவர்களுக்கு அதிகமான பலன்களையும், தகுந்த கொளரவங்களையும் சம்பாதித்துக் கொடுக்கக்கூடிய சக்தி வக்கீல் தொழிலுக்குத் தான் இருந்தது. மேலும், வாழ்வில் வெற்றியோடு விளங்கிய அண்ணா பின்பற்றத் தக்க உதாரணமாக அவர் கண் முன் நின்றார்.

எனவே, மோதிலால் நேரு ஹைக்கோர்ட் வக்கீல் பரீட்சையில் கலந்து கொண்டார். அதில் முதலாவதாகத் தேர்ந்து, தங்கப் பதக்கமும் பெற்றார். தான் எண்ணித் துணிந்து திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கும் பாதையில் அற்புதமான சாதனைகள் கண்டு வெற்றி பெறும் சக்தி தனக்கு உண்டு என்பதை அவர் நன்கு நிரூபித்துவிட்டார்.

மோதிலால் கான்பூர் ஜில்லாக் கோர்ட்டில் மூன்று வருஷ காலம் வக்கில் தொழில் கடத்திய பிறகு அலகாபாத் ஹைகோர்ட் வக்கீலானார். கடுமையாக உழைத்துத் தக்க கவனிப்பைப் பெற்றார். இச் சந்தர்ப்பத்தில் அவரது சகோதரர் மரணமடைந்தார். இத்துயரம் அவருக்குப் பேரிடியாகத் தோன்றியது. தன்னை முன்னுக்குக் கொண்டு வந்த மூத்த சகோதரர் இறந்த துக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/15&oldid=1362238" இலிருந்து மீள்விக்கப்பட்டது