பக்கம்:நம் நேரு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

17


பூங்காவிலும் பிற இடங்களிலும் கிடந்த நாற்காலி, பெஞ்சுகள் யாவும் வெள்ளையருக்காக ’ரிசர்வ்’ செய்யப்பட்டவை; அவற்றின் மீது இந்தியர் அமர்வது குற்றம் என்ற நீதி தான் குடியிருந்தது-இந்தியரின் சொந்த நாட்டிலே. இவற்றை உணர்ந்த எவரின் நெஞ்சு தான் கொதியாது இருக்கும்?

நேரு குடும்பத்து இளைஞர்களின் உள்ளம் கொதித்தது. அவர்களது சூடான பேச்சுகளைக் கேட்டுக் கேட்டுச் சிறு வயது ஜவஹரின் பிஞ்சு நெஞ்சிலும் ஆளும் இனத்தோர் மீது கசப்பு பிறந்தது. ஆங்கிலேயன் ஒருவன் எதிர்த்துத் தாக்கப்பட்டான் என்ற செய்தி காதில் விழுந்தால் அவர் மனம் ஆனந்தக்களிப்பு பாடியது. அவருடைய உறவினர்களில் ஒருவரோ, அவர்களின் நண்பன் யாருமோ அடிக்கடி அந்நியரை வம்புச் சண்டைக்கு இழுத்துப் பாடம் புகட்டி வந்தது பெரிய தீரச்செயலாக மதிக்கப்படும்.

அடாது செய்த ஆளும் வர்க்கத்து மீதுதான் ஜவஹருக்கக் கசப்பு ஏற்பட்டதே தவிர, தனிப்பட்ட ஆங்கிலேயன் எவன் பேரிலும் அவருக்குக் கோபமோ வெறுப்போ எழுந்ததில்லே. ஆங்கிலேய உபாத்தியாயினிகளும் உபாத்தியாயர்களும் அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டுதானிருந்தனர். ஆங்கிலேயர் பலர் அவர் தந்தையின் நண்பர்களாக விளங்கினர். அவர்கள் அடிக்கடி நேருவின் வீட்டுக்கு வந்து போகும் வழக்கமும் இருந்தது. "எனது இதய ஆழத்திலே இங்கிலிஷ் காரரை வியக்கும் பண்பு இருந்து வந்தது' என்று நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/20&oldid=1363991" இலிருந்து மீள்விக்கப்பட்டது