பக்கம்:நம் நேரு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

நம் நேரு



ஜவஹர்லாலுக்கு தந்தை பேரில் பாசமும் நேசமும் இருந்தன. தந்தையின் பண்புகள் பலவற்றை எண்ணி எண்ணி வியக்கின்ற குணமும், தந்தையைப் போல திகழ வேண்டும் என்ற ஆசையும் ஒன்றாக வளர்ந்தன அவர் உள்ளத்தில். அறிவு, ஆற்றல், வீரம் இவற்றுக்கெல்லாம் சரியாக உருவகம் தன தந்தைதான் என்ற நம்பிக்கை அவருக்குச் சிறு வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. மோதிலால் திடீரென்று பொறுமை இழந்து, ஆங்காரம் உற்று எரிந்து விழும் பண்பு பெற்றிருந்தும், வேலைக்காரர்களைக் கோபித்துக் கண்டிக்கும் தன்மையும் ஜவஹருக்கு அச்சமும் நடுக்கமும் தந்தன.

தனது தந்தையின் கோபத்துக்குத் தான் இலக்கான சந்தர்ப்பம் ஒன்றைப்பற்றி ஜவர்ஹாலால் நேரு தன் சுயசரிதையில் எதியிருக்கிறார்---அவருக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் போது நடந்த நிகழ்ச்சி அது.

தந்தையின் ஆபிஸ் மேஜை மேல் இரண்டு பவுண்டன் பேனாக்கள் இருந்ததை நேரு கண்டார். அவை ஆசையை கிளறின. ஒரே சமயத்தில் ஒருவருக்கு இரண்டு பேனாக்கள் தேவைப்படாது; அதனால் ஒரு பேனாவை எடுத்துக்கொண்டால் தந்தைக்குத் தெரியாது என்று ஜவஹர் எண்ணினர். எடுத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வீடே அமளிதுமளிப் பட்டதை அறிந்ததும் அவருக்கு, நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. காணாமல் போன பேனாவைத்தான் தேடுகிறார்கள் என்று புரிந்தும் கூட அவர் உண்மையை ஒப்புக்கொள்ளத் துணியவில்லை. ஆயினும் விஷயம் அம்பலமாகிவிட்டது. மிகுதிபம் கோபம் கொண்டிருந்த தந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/21&oldid=1363997" இலிருந்து மீள்விக்கப்பட்டது