பக்கம்:நம் நேரு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

27



நேரு ஹாரோவில் கல்வி கற்று வந்த காலத்தில் வேறு நாலைந்து இந்திய மாணவர்களும் அங்கு படித்து வந்தனர். அவர்களைச் சந்தித்து அவர்களுடன் அதிகமாகப் பழகியதில்லை நேரு. ஹாரோ தனக்கு உகந்த இடமில்லை என்ற உணர்வு அவர் உள்ளத்தில் வளர்ந்து வந்தது. 1906-1907-்ம் வருஷங்களில் இந்திய அரசியல் உலகில் நிகழ்ந்த பெரிய விஷயங்களைப் பற்றி அவர் பத்திரிகைகள் மூலம் ஓர் சிறிதே உணர முடிந்தது. ஆயினும் இந்தியா விழித்தெழுந்து விட்டது என்பதை ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான சிறுசிறு செய்திகள் கூட உலகுக்கு நாவலித்தன. வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய பிரதேசங்களில் குறிப்பிடத் தகுந்த உரிமைக் கிளர்ச்சிகள் நடைபெறுவதை நேரு ஊகிக்க முடிந்தது. லாலா லஜபதி ராய், அஜித் சிங் ஆகிய தலைவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள். திலகரின் பெயர் முழங்கத் தொடங்கியது. சுதேசி இயக்கமும், மறியல்களும் நிகழ்ந்தன. இவை பற்றிய சிறு செய்திகள் உள்ளத்தில் எழுப்பிய எதிரொலிகளே வாய்விட்டுப் பேசி மகிழ்வதற்குக் கூடச் சரியான தோழர்கள் ஹாரோவில் அவருக்குக் கிட்டவில்லை.

பள்ளிக்கூடத்தில் அவரது திறமைக்காக அளிக்கப் பட்ட பரிசுப் புத்தகங்களில் கெரிபால்டியின் வரலாற்று நூல் ஒன்று இருந்தது. இத்தாலிய வீரன் கெரிபால்டியின் கதை நேருவை வசீகரிக்கவே, கெரிபால்டி வரலாறு பற்றிய இதர புத்தங்களையும் வாங்கிப் படித்தார் அவர். விடுதலை வேட்கையுடன் போராடிய இத்தாலியைப் போல் இந்தியாவும் சுதந்திரத்துக்காகப் போரிட வேண்டும் என்ற இதயத் துடிப்பு அவருக்கு ஏற்பட்டது. தனது எண்ணங்களும் லட்சிய ஆர்வமும் வளருவதற்கு ஏற்ற சூழ்நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/30&oldid=1365056" இலிருந்து மீள்விக்கப்பட்டது