பக்கம்:நம் நேரு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழ்க்கை வரலாறு

29


லால் நேருவிடம் கூச்சமும் தயக்கமும் குடி கொண்டிருந்ததால், சபை முன் நின்று அவர் பேசத் துணிவதில்லை, அடிக்கடி அபராதம் செலுத்துவதல் அவர் தயக்கம் காட்டியதே இல்லையாம்! பிற்காலத்தில் எவ்வளவு பெரிய ஜன சமுத்திரத்தின் முன் நின்றும், மணிக் கணக்கிலே சகலவிதமான பிரச்னைகளையும் தீர்த்துக் கட்டி விடும் சிந்தனைத் தீர்க்கமும் பேச்சு நயமும் கலந்த சொற்பொழிவுகளே ஆற்றும் வன்மை பெற்றுவிட்ட நேரு தனது வாலிபப் பருவத்திலே இப்படி இருந்தார் என்பது வியப்புக்குரிய விஷயம் தான் ; இல்லையா ?
இத்தகைய முரண்பாடு மற்றவர்கள் வாழ்க்கையில் வேறு விதமாகத் திகழ்ந்தது என்று தெரிகிறது. நேருவுடன் கல்வி கற்ற இந்திய மாணவர்கள்— ‘மஜ்லிஸ்’ — கேம்பிரிட்ஜில் தீவிரமாகப் பேசினர்கள். வங்காளத்தில் தலைகாட்டி வளர்ந்த பலாத்கார இயக்கத்தை வியந்து போற்றினார்கள். அவர்களில் யாருமே பின்னர் இந்திய தேயே விடுதலை இயக்கம் எதிலும் கலந்து கொள்ள வில்லை, பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தியன்ஸிவில் சர்வீஸில் உத்தியோகம் பெற்றும், ஹைக்கோர்ட்டு நீதிபதிகளாக அமர்ந்தும், ஈவு இரக்கமற்ற வக்கீல்களாக மாறியும் தான் வாழ்க்கை நடத்தினார்கள் அந்த ஆரம்ப சூரப்புலிகள்.
இடைக் காலத்தில், ஜவஹரின் தந்தை இந்திய அரசியலில் கலந்து பணியாற்ற முன் வந்திருந்தார். இவ்விஷயம் நம் நேருவுக்கு மகிழ்வு அளித்தது. எனினும் மோதிலால் மிதவாதிகள் கோஷ்டியில் சேர்ந்திருந்தது அவருக்கு அதிருப்தியைக் கொடுத்தது. மோதிலாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/32&oldid=1363362" இலிருந்து மீள்விக்கப்பட்டது