பக்கம்:நம் நேரு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நம் நேரு


கசப்பானதாகத் தோன்றாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பல வருஷங்களுக்குப் பிறகு இதே யோசனை எனது வெறுப்பையே ஏற்றிருக்கும்" என்று 1986-ல் நேரு எழுதியிருக்கிறார்.

கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்று 1910-ம் வருஷம் அவர் லண்டன் நகர் அடைந்து சட்டக் கல்வி பயின்றார். அதற்காக இரண்டு வருஷங்கள் லண்டனில் கழித்தார். அந்நாளைய அனுபவங்கள் அவருக்கு எவ்வித அபிவிருத்தியும் அளிக்கவில்லை. விடுமுறைக் காலங்களில் அவர் ஐரோப்பிய நகரங்களில் சுற்றுப்பிரயாணம் செய்து மகிழ்ந்தார்.

1910-ம் வருஷம் நேரு நார்வேயில் தங்கியிருந்த போது ‘அவர் பிழைத்தது மறு பிழைப்பு' என்று சொல்லும்படியான சம்பவம் ஒன்று நிகழ்ந்து விட்டது. மலைப் பிரதேசங்களில் சுற்றித் திரிந்து, வேர்த்து விறு விறுத்துப் போய் ஒரு சிறிய ஹோட்டலை அடைந்தனர் நேருவும் அவரது நண்பர்கள் சிலரும். குளிக்கும் வசதி அந்த ஹோட்டலில் இல்லை. ஆயினும் சற்றுத் தொலைவில் ஒடிய நீரோடையில் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நேருவும் இங்கிலீஷ்காரர் ஒருவரும் அந்த ஓடைநோக்கிச் சென்றனர். வேகமாக ஓடிப் பாய்ந்த அந்த நீரோடையில் ஆழம் அதிகமில்லை. ஆனால் வழுக்கு இருந்தது. குளிர் நடுக்கியது. நேருவின் கால் வழுக்கவே அவர் நீரில் விழுந்து விட்டார். ஐஸ் போல் குளிர்ச்சி பெற்றிருந்த தண்ணீர் அவர் உடலே விரைத்துப் போகும் படி செய்தது. அவரது அங்கங்கள் செயல் திறம் இழந்தன. எழுந்து காலூன்றி நிற்கமுடியவில்லை அவரால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/35&oldid=1366155" இலிருந்து மீள்விக்கப்பட்டது