பக்கம்:நம் நேரு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

நம் நேரு


அவருடைய தந்தையும் இத்தகைய மனக்குழப்பத்தை அனுபவித்துக் கஷ்டப்பட்டார். அன்னிபெசன்ட் அம்மையார் சிறையில் தள்ளப்பட்டதும், 1919-் பாஞ்சாலத்தில் நிகழ்த்தப் பெற்ற படுகொலையும் தான் அவரைத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, தொழிலை உதறி எறியச் செய்து படுகளத்தில் குதிக்கத் துண்டின. 1915 முதல் 1917 வரை அவர் உள்ளக்குழப்பம் அதிகரித்து வந்ததால் அடிக்கடி அவருக்கும் ஜவஹருக்கும் இடையே விவாதங்கள் சூடேறி விடுவது வழக்க மாயிற்று. மோதிலால் சீறிவிழுவதோடு தந்தை-மகன் சம்பாஷனைகள் முற்றுப் பெறுவதே இயல்பாயிற்று.

இருண்டு கிடந்த இந்திய அரசியல் வானிலே நம்பிக்கை ஒளி புகுத்த ஒரு ஜோதி பிறந்தது. அந்த ஜோதிதான் காந்திஜீ.

காந்திஜீயை ஜவஹர்லால் நேரு முதல் தடவையாகச் சந்தித்தது 1916-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற லக்ஷ்மணபுரிக் காங்கிரசின் போது தான். காந்தி தென்ஆப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் காரணமாக இந்தியாவில் உள்ளவர்களது போற்றுதலைப் பெற்றிருந்தார். இந்திய தேசீயவாதிகள் அவரை வீரராக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவருடைய கொள்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் இந்திய அரசியலுக்குமிடையே பெரியபிளவு கிடக்கிறது; இரண்டும் சேருவது சாத்தியமில்ல; காந்தி அரசியல் உலகம் எட்டமுடியாத தொலைவிலேயே நிற்க விரும்புகிறார் என்றே பிறருக்குத் தோன்றியது. காந்திஜீயும் காங்கிரஸ் நடவடிக்கைகளிலோ, தேசியப் பிரச்னைகளிலோ நேரடியாகக் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/43&oldid=1366198" இலிருந்து மீள்விக்கப்பட்டது