பக்கம்:நம் நேரு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

41


கொள்ள அப்பொழுது தயாராக இல்லை தென்ஆப்பிரிக்கா சம்பந்தமான பிரச்சனைகள் எழுந்த போது மட்டுமே தீவிரமாகப் பங்குகொண்டார் அவர்.

பின்னர் சம்பரான் என்னும் இடத்தில் பண்ணைக் கூலிகள் சம்பந்தமாக காந்திஜி நடத்திய போராட்டங்களும், அவர் பெற்ற வெற்றிகளும் அரசியல் உலகில் மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கின. காந்திஜீ தமது சத்தியாக்கிரக முறைகளே இந்தியாவிலும் கையாளத் தயாராக இருக்கிறார்: அவரது முறைகள் குறிப்பிடத் தகுந்த வெற்றியையும் பெற்றுத் தருகின்றன எனும் உண்மைகள் எல்லோருக்கும் ஊக்கம் அளித்தன.

அச் சமயத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடு நிகழ்த்தி வந்த வீரப் பிரசங்கங்களும் ஜவஹரின் உள்ளத்திலே கிளர்ச்சி உண்டாக்கின. தேசீயம், தாய்நாடுப் பற்று முதலிய விஷயங்களைக் குறித்து கவியரசி வீரமுழக்கம் செய்து வந்தார்.

அயர்லாந்தில் தோன்றிய சுதந்திரக் கிளர்ச்சியும், ஐரிஷ் ஈஸ்டர் புரட்சி'யின் முடிவும் இந்திய அரசியல்வாதிகளுக்கு அறிவு கொளுத்தும் சரித்திரச் சான்றுகளாக விளங்கின. இவற்றுடன், சிந்தனைச் சுடர்கள் மலிந்து கிடந்த அறிவுக் களஞ்சிகளையும். சிந்தனையாளர்களின் புதிய புதிய நூல்களையும் விடாது படித்து வந்ததால் - ஜவஹரின் சிந்தனை நெருப்பும் 'கணகண' என்று ஒளிரத் தொடங்கிவிட்டது. அவருடைய ஆசைத் துடிப்புகள் அடக்க இயலாச் சக்தி பெற்றன.

அதனால் அவர் அனுஷ்டித்த வக்கீல் தொழில் மீது நேருவுக்கு வெறுப்பு உண்டாயிற்று. வக்கீல் தொழிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/44&oldid=1356638" இலிருந்து மீள்விக்கப்பட்டது