பக்கம்:நம் நேரு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நம் நேரு


அவரது தேசீய-பொதுப்பணி ஆர்வமும் ஒன்று சேர்ந்து வாழமுடியாது என்று கண்டார் அவர். அவர் தனது முழு நேரத்தையும் பூரணச் சக்தியையும் தாய்நாட்டின் விடுதலைக்காகச் செலவிட்டாக வேண்டும் என்று கருதினார்.

அப்பொழுது தான், கல்கத்தாவின் பிரபல வக்கீலாக விளங்கிய ஸ்ர் ராஷ் பீஹாரி கோஷ் வக்கீல் தொழிலின் மேன்மை பற்றியும் எப்படி முன்னேறலாம் என்பது குறித்தும் தமது மேலான அபிப்பிராயங்களை உபதேசித்தார். சட்ட விஷயமாக ஒரு புத்தகம் எழுதும்படியும், வக்கீல் தொழிலைப் புதிதாக ஏற்றுள்ள நேரு முன்னேறுவதற்கு அது தான் சுலபமான மார்க்கமாகும் என்று கோஷ் ஆலோசனை கூறினர். தாமே புத்தகங்களுக்குத் தேவைப்படுகிற ’ஐடியா'க்களை அவ்வப்போது வழங்கி, ஆவன செய்வதாவும் உறுதிகூறினார். ஆயினும் அவருடைய பேச்செல்லாம் வீண் உபதேசங்களாகவே முடிந்தன. காரணம், நேருவுக்கு சட்டங்கள் சம்பந்தமான புத்தகங்கள் எழுதுவது என்கிற எண்ணமே ’எட்டிக் காயாக’ இருந்ததுதான். “எனது காலத்தையும் சக்தியையும் சட்டங்கள் பற்றிய புத்தகங்கள் எழுதுவதில் பாழாக்குவது போன்ற வெறுப்பான விஷயம் வேறு எதுவும் இருக்கமுடியாது” என்ற கருத்து தொனிக்கும்படி நேரு சுயசரிதையில் குறித்து வைத்திருக்கிறார்.

1916-ம் வருஷம் ‘வசந்த பஞ்சமி’ தினத்தில் இந்தியாவில் வசந்த காலத்தின் வருகையைக் கொண்டாட அமைந்த சுபதினத்திலே-டில்லி நகரில் ஜவஹர்லால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/45&oldid=1366761" இலிருந்து மீள்விக்கப்பட்டது