பக்கம்:நம் நேரு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

நம் நேரு


நிதிகளும், வெளியிலுள்ள மக்கள் கூட்டமும், காந்தியின் தலைமைக்காகவே காத்திருந்தனர். மகாத்மா காந்திக்கு ஜே! என்ற கோஷம் அரசியல் வானிலே அதிறத் தொடங்கியது அந்தக் காங்கிரஸிலிருத்து தான்.

1920-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதியன்று காந்திஜீ கிலாபத் இயக்கம் சம்பந்தமாக ஒத்துழையாமைப் போராட்டத்தைத் துவக்கத் திட்டமிட்டிருந்தார். அன்று காலையில் தான் பம்பாயில் திலகர் இறந்து போனார். ஸிந்து மாகாணத்தில் பிரயாணம் செய்து விட்டு காந்திடம் காந்திஜீயும் ஜவஹர்லாலும் அன்று தான் பம்பாய் வந்து சேர்ந்திருந்தனர். பம்பாய் நகரமே ஒருங்கு திரண்டு தங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான தலைவர் திலகருக்கு இறுதி மரியாதை செய்தது. அச் சடங்கிலே காந்தியும் நேருவும் கலந்து கொண்டனர்.


அத்தியாயம் 5.


பல வருஷங்கள் வரை நேருவின் அரசியல் நடவடிக்கைகளில் பூர்ஷ்வாப் பண்பே ஓங்கியிருந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்னைகளைக் குறித்து அன்றைய அரசியல் தலைவர்கள் சிந்தித்ததே இல்லை. பத்திரிகைகளும் அந்த வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளுக்குக் கூட இடமளித்ததில்லே.

1920-ம் வருஷம் வரை, பாக்டரிகளிலும் வயல்களிலும் உழைத்து வந்தவர்களின் வாழ்க்கைத்தரம் பற்றி நான் ஓர் சிறிதும் அறிந்ததில்லை. எனது அரசியல் போக்கு முழுக்கழுக்க பூர்ஷ்வாத்தன்மையே பெற்றி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/53&oldid=1376976" இலிருந்து மீள்விக்கப்பட்டது