பக்கம்:நம் நேரு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

51


ருந்தது. நாட்டிலே பயங்கரமான வறுமையும், துயரமும் நீடிக்கிறது என்பது மட்டுமே எனக்குத் தெரியும். அரசியல் உரிமை பெற்றுவிடுகிற சுதந்திர இந்தியாவின் முதல் கடமை நாட்டின் வறுமையை ஒழித்துக் கட்டுவதுதான் என்ற உணர்வு பெற்றிருந்தேன். சுதந்திரம் கிடைத்தவுடன் மத்தியதர வர்க்கத்தினர் சுபீட்சவாழ்வு பெறவேண்டும், அது தானகவே நேர்ந்துவிடும் என்று தோன்றியது. பீகார் மாகாணத்தில் உள்ள சம்பரானிலும் குஜராத்தில் உள்ள கெய்ராவிலும் காந்திஜீ நடத்திய விவசாயப் போராட்டங்களுக்கு அப்புறம்தான் நான் குடியானவர் பிரச்னைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்” என்று நேரு எழுதியுள்ளார்.

1920-ம் வருஷம் மே மாதம் ஜவஹரின் தாயாரும் மனைவி கமலாவும் உடல் நலக் குறைவு காரணமாக முசெளரியில் தங்கியிருக்க நேர்ந்தது. ஆப்கானய யுத்தத்துக்குப் பிறகு பிரிட்டிஷாருக்கும் ஆப்கானியருக்குமிடையே சமாதான ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஆப்கானியப் பிரதிநிதிகள் முசெளரியில் முகாமிட்டிருந்தனர். அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் கொள்வதில்லை என நேரு உறுதிமொழி தர வேண்டும் என்று அரசினர் கோரினர். நேரு மறுத்தார் அதனால் அவர் முசெளரியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. நேரு டெஹ்ரா டன் ஜில்லாவிலிருந்து நீங்கி அலகாபாத்தில் இரண்டு வார காலம் தங்கியிருந்தார். இடைக்காலத்தில் ஆட்சியினரும் தங்கள் மனதை மாற்றி உத்திரவை வாபஸ் பெற்று விட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/54&oldid=1367246" இலிருந்து மீள்விக்கப்பட்டது