பக்கம்:நம் நேரு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

நம் நேரு


விலகிநின்றனர். மத்தியதரவர்க்கத்தினரிலும் அடிப்படியில் நின்றவர்களே பெரும்பாலும் காங்கிரஸில் சேர்ந்தார்கள். காங்ரஸின் ஒற்றுமையும் கட்டுப்பாடும் ஆத்மபலம் பெருகி வந்தன.


அதற்கு நேர்மாறாக அரசினரின் பண்பு வளர்ந்தது. நீதி, தர்மம் முதலியவைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தலைவர்களின் பண்பையோ, நாட்டு மக்களின் போக்கையோ, அவர்களது செயல்களின் பலா பலன்களைப் பற்றியோ சர்க்கார் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆங்கிலேயரின் உள்ளத்தில் குழப்பமும் கலவரமுமே கூத்திட்டன. பிரிட்டிஷ் ஆட்சி மீது மக்களுக்குப் பூரணமான வெறுப்பு ஏற்பட்டு விட்டது.


எங்கும் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் தலைதூக்கவே, சிறைச்சாலைகள் நிரம்பத் தொடங்கின. தலைவர்களும் தொண்டர்களும் சாதாரண ஜனங்களும் ஜெயிலில் தள்ளப்பட்டார்கள். மக்களின் குழம்பிய சிந்தனைகள் ஆசைகள் ஆகியவற்றுக்குத் தெளிவான உருவம் தரும் சின்னமாக” விளங்கினர் காந்திஜீ.


ஜவஹர்லால் நேருவின் ஊக்கம், உற்சாகம், உழைப்பு முதலியவற்றுக்கு ஒரு அளவே இருந்ததில்லை. நாட்டைக் குலுக்கிய இயக்கத்தோடு இயக்கமாக ஒன்றி விட்டார் அவர். புத்தகங்கள், நண்பர்கள், உறவுத் தொடர்புகள் எல்லாவற்றையும் மறந்து விட்டார் நேரு, மனைவி, மகள், குடும்ப விவகாரங்கள்-யாரும் எதுவும் அவர் சிந்தையில் படிந்து நிற்கவில்லை அக்காலத்தில், ஆபீஸ்களிலும், கமிட்டிகளிலும், பொதுக்கூட்டங்களி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/59&oldid=1362375" இலிருந்து மீள்விக்கப்பட்டது