பக்கம்:நம் நேரு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

57


லும், கிராமங்களிலும் தான் வாழ்ந்தார் அவர். நேருவுக்கு ஜனங்களைப் பிடித்துப் போயிற்று. ஜனங்களுக்கு நேருவிடம் விசேஷமான பற்றுதல் ஏற்பட்டுவிட்டது.

1921-ம் வருஷ ஆரம்பத்தில் தனிப்பட்ட தலைவர்களை மட்டும் தான் கைது செய்து கொண்டிருந்தது அரசாங்கம், ஆனால் ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்வதாகத் திட்டம். அவருக்கு வரவேற்பு அளிக்கும் எல்லா விழாக்களையும் பகிஷ்கரிக்க உத்திரவிட்டது காங்கிரஸ். "இந்தியா பூராவுமே ஒரு பெரிய சிறைச்சாலைதான். அடிமை விலங்கைத் தகர்த்தெறிய வேண்டியது காங்கிரளின் வேலே" என்று கர்ஜித்தார் தலைவர் ஸி. ஆர். தாஸ். காங்கிரஸின் சவாலே ஏற்பது போல் சர்க்கார் காரியங்கள் செய்தது. கும்பல் கும்பலாக ஆட்களை ஜெயிலுக்குள் தள்ளியது! 1921 டிசம்பர். 1923 ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் முப்பதினாயிரம் பேர் சிறையில் தள்ளப்பட்டதாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது.

1921 -டிசம்பரில் தான் ஜவஹர்லால் நேரு முதன் முதலாக சிறை அனுபவம் பெற்றார். தலைவர்களும் ஜனங்களும் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தபோதும், காந்திஜீயைக் கைது செய்யத் துணியவில்லே அரசாங்கம். அவரைக் கைது செய்தால் நாட்டில் பெருங்குழப்பம் ஏற்பட்டுவிடுமே என்ற பயம்தான் காரணம்.

காந்திஜி வழிகாட்டித் திட்டங்களிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வந்து போது, 1922 பிப்ரவரியில் செளரி செளரா எனும் இடத்தில் சிலர் பலாத்கார முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/60&oldid=1363981" இலிருந்து மீள்விக்கப்பட்டது