பக்கம்:நம் நேரு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

நம் நேரு


அக் காலத்தில் சிக்கியர் கிளர்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. பஞ்சாப், பாட்டியாலா, நாபா சமஸ்தானங்களை ஆண்டு வந்த சீக்கிய மன்னர்களிடையே சொந்தப் போராட்டங்கள் வேறு நடைபெற்றன. அவற்றின் விளைவாக நாபா சமஸ்தான அரசர்பட்டம் இழந்தார். ஆட்சிப் பொறுப்பு இந்திய அரசாங்கத்தினரிடம் வந்து சேர்ந்திருந்தது. பிரிட்டிஷார் நாபா சமஸ்தானத்துக்கு ஒரு அட்மினிஸ்ட்ரேட்டர்’ நியமித்தனர்.

அந்த அதிகாரி சீக்கியரின் மதஉரிமையில் குறுக்கிட்டு ஜெய்தோ எனும் இடத்தில் நிகழவிருந்த ஒரு விழாவை நடைபெறாமல் தடுத்துவிட்டார். அதை எதிர்த்துப் போராடவும், விழாவை நடத்தவும் சீக்கியர் கோஷ்டி கோஷ்டியாக ஜெய்தோவுக்குப் போனார்கள். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, மூர்க்கத்தனமாக அடித்துக் கைதுசெய்து, காட்டு வெளிகளுக்குத் தூக்கிச் சென்று ஆங்காங்கே விட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டார்கள்.

பத்திரிக்கைகளில் இவ்விதமான செய்திகள் அடிக்கடி வருவதைக் கண்டார் நேரு. டில்லியில் கூடிய விசேஷக் காங்கிரஸ் முடிவுற்றிருந்த சமயத்தில், மற்றுமோர் சீக்கிய ஐநா ஜெய்தோவுக்குக் கிளம்புகிறது என்று நேரு அறிந்தார். அக் கோஷ்டியுடன் சென்று, என்ன தான் நடக்கிறது என்று நேரடியாக ஆராய விரும்பினார் அவர். "இதனால் பிரமாத நஷ்டம் எதுவும் வந்து விடாது. ஒரே ஒரு நாள் தான் வீணாகும்” என்று நினைத்தார். அவர் ரயில் மூலம் சென்று, தனிப் பாதை வழியாக ஜெய்தோ எல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/63&oldid=1363287" இலிருந்து மீள்விக்கப்பட்டது