பக்கம்:நம் நேரு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

61


யை அடைய வேண்டியது; சீக்கிய கோஷ்டி வரும்போது காபா சமஸ்தான எல்லேயில் நின்று அனைத்தையும் கவனிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

நேருவுடன், கித்வானியும், கே.சந்தானமும் சென்றனர். காபா சமஸ்தானத்தை அவர்கள் சேர்வதற்கும் சீக்கிய கோஷ்டி அங்குவருவதற்கும் சரியாக இருந்தது. கோஷ்டி முன்னே செல்ல, நேருவும் நண்பர்களும் சற்று விலகியே சென்றார்கள். சமஸ்தானத்தினுள் பிரவேசித்ததும், போலீசார் கோஷ்டியைத் தடுத்து நிறுத்தினர். நேருவிடமும் மற்ற இருவரிடமும் பிரிட்டிஷ் அதிகாரி கையெழுத்திட்ட உத்திரவை ஆளுக்கு ஒன்றாக் கொடுத்தனர்.

நேரு சமஸ்தானத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது; எல்லையைத் தாண்டி உள்ளே வந்திருந்தால் உடனடியாக வெளியேறி விடவேண்டும் என்று அந்த உத்திரவில் கண்டிருந்தது. மற்றவர்களுக்கும் இதே உத்திரவுதான் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

"நாங்கள் ஜதாவில் கலந்து கொள்ள வரவில்லை. நிகழ்ச்சிகளைக் கண்டு போகவே வந்திருக்கிறோம். நாபா சமஸ்தான விதிகளை மீறும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது” என்று நேரு எடுத்துச் சொல்லியும், போலீசார் கேட்கவில்லை.

"நாங்கள் நாபாவினுள் வந்தாயிற்று, உள்ளே வரக்கூடாது என்கிற உத்திரவை இப்பொழுது கொடுப்பதில் அர்த்தமே கிடையாது. மேலும் சட்டென எவ்வாறு நாங்கள் போய்விட முடியும்? காற்றோடு காற்றாகக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/64&oldid=1367279" இலிருந்து மீள்விக்கப்பட்டது