பக்கம்:நம் நேரு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

நம் நேரு


கலந்து விடும் சக்தி எங்களுக்கு இல்லையே! என்று நேருவும் அவர் நண்பர்களும் சொன்னார்கள். ஜெய்தோவிலிருந்து கிளம்பும் ரயிலுக்குப் பலமணி நேரம் காத்திருக்க வேண்டும், அதுவரையில் அங்கேயே தங்கியிருக்கப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

போலீசார் மூவரையும் கைது செய்து 'லாக்கப்'பில் அடைத்தனர். பிறகு சீக்கியரிடம் வழக்கம் போல் தங்கள் கைவரிசைகளைக் காட்டித் தீர்த்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மாலைவரை லாக்கப்பில் வைத்திருந்து பின்னர் ஸ்டேஷனுக்கு. இட்டுச் சென்றனர். சந்தானத்தின் இடதுகையோடு நேருவின் வலது கையைப் பிணைத்து விலங்கிட்டு, அதிலுள்ள சங்கிலியைப் பிடித்து அவர்களை ஜெய்தோவின் வீதிகள் வழியாக அழைத்துச் சென்றார்கள் போலீஸ்காரர்கள், “நாயைச் சங்கிலியல் கட்டி இழுத்துச் செல்வதுபோல் இருக்கிறது" என்ற எண்ணமே நேருவின் மனதில் எழுந்தது. இரவில் ரயிலிலும். நாபா 'லாக்கப்’பிலும் அவர்கள் இந்நிலையிலேயே பொழுது போக்கநேர்ந்தது. மறுநாள் மத்தியானம் பாபா ஜெயிலில் சேர்ப்பிக்கப்பட்ட பிறகுதான் அவர்களைத் தனித்தனியாக்கினார்கள்.

“ஒருவர் சகாயமில்லாமல் மற்றவர் நகரக்கூட இயலாத நிலை. ஒரு இரவும் பகலில் பாதிநேரமும் இன்னொருவர் கையோடு சேர்த்து விலங்கிட்டுக் கிடக்கிற கசப்பான அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்கும் ஆசை எனக்கு எழவே எழாது." என்று நேரு குறிப்பட்டிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/65&oldid=1367304" இலிருந்து மீள்விக்கப்பட்டது