பக்கம்:நம் நேரு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

நம் நேரு


ரேஷன் நடைபெற்றது. எல்லோறும் கவலையோடும் பயத்துடனும் காத்திருந்தனர். ஆபத்து சுமுகமாக நீங்கிவிட்டது. காந்தியைத் தரிசிக்கும் ஆவலோடு வெள்ளம் போல் மக்கள் கூட்டம் பூனா நோக்கிச் சென்றனர். நேருவும் தந்தையோடு காந்திஜீயைக் காணச் சென்றார்.

ஆறு வருஷ சிறைத் தண்டனை விதிக்கப்பெற்றிருந்த காந்திஜீ இரண்டு வருஷங்களேத்தான் கடந்திருந்தார். எனினும், மீண்டும் அவரை ஜெயிலுக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் துணிய வில்லே. காந்தி உடல் நிலை தேறுவதற்காக பம்பாய் கடலோரத்திலுள்ள ஜுஹூவில் தங்கியிருத்தார். மோதிலாலும் குடும்பத்துடன் அங்கு சென்று சில வாரங்கள் வசித்தார். பல வருஷங்களுக்குப் பிறகு, மனதுக்கு இசைந்த வகையில், கடலில் நீந்திக் களிக்கவும். மணலில் ஓடி ஆடவும், குதிரை சவாரி செய்யவும் நேருவுக்கு நிறையச் சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

ஆனால் இத்தகைய ஒய்வு, கொண்டாட மட்டுமே நேருவும், மோதிலாலும் அங்கு குடியேற வில்லை. காந்திஜீயுடன் விரிவாகப் பேசி விளக்கம் பெற விரும்பினார்கள் தந்தையும் மகனும்.

காந்திஜீயின் பலத்தை சுயராஜ்யக் கட்சிக்குச் சம்பாதிக்க முயன்றார் மோதிலால். அவர் வெற்றி காணவில்லை.

நேருவும் ஏமாற்றம் தான் அடைந்தார். அவர் கொண்ட சந்தேகம் எதையும் தெளிவுபடுத்தி விடவில்லை காந்திஜீ. தமது கொள்கைகளிலும் நம்பிக்கைகளி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/69&oldid=1367409" இலிருந்து மீள்விக்கப்பட்டது