பக்கம்:நம் நேரு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

69



அது நடந்தது 1925-ல் அவ் வருஷம். நேருவின் மனைவி நோயுற்று பல மாதங்களாக லக்ஷ்மணபுரி ஆஸ்பத்திரியில் கிடந்தாள். அப்பொழுதும் நேரு காங்கிரஸின் பொதுக் காரியதரிசியாக இருந்ததால், அவர் அலகாபாத்துக்கும், கான்பூருக்கும், லக்ஷ்மணபுரிக்குமிடையே ஓடி அலைந்து சிரமப்பட்டார். கமலாவின் உடற்சிகிச்சைக்காக ஸ்விட்ஸர்லாந்து செல்ல வேண்டியது அவசியம் என்று டாக்டர்கள் சிபார்சு செய்தார்கள்.

அந்த அபிப்பிராயத்தை உற்சாகமாக வரவேற்றார் நேரு. தெளிவான பாதையோ புலனாகவில்லை. அவருடைய உள்ளம் ஒரே குழப்பமயமாக இருந்தது. இந்தியாவிலிருந்து விலகி வெகுதொலைவில் இருந்து பிரச்னைகளைக் கவனித்து ஆராய்ந்தால் அக இருள் நீங்கி ஒளி ரேகை தோன்றலாம் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வளர்ந்து வந்தது. அயல்நாடு செல்வதற்கு இப்போது நல்ல சாக்கு கிடைத்தது என்று மகிழ்ந்தார் நேரு.

ஆகையினால், நேரு 1926-மார்ச் மாதத்தில், தனது மனைவியுடனும் மகளோடும் வேனிஸ் நகருக்குக் கப்பலேறினார்.


அத்தியாயம் 8.


நேரு, பதிமூன்று வருஷ இடைக் காலத்திற்குப் பிறகு, மீண்டும் ஐரோப்பாவில் அடியெடுத்து வைத்திருந்தார். அந்தக் கால அளவினுள் உலகம் யுத்த பயங்கரத்தையும் ரத்தக் களறியையும் அனுபவித்திருந்தது. நாடுகள் பலவும் பெரிய பெரிய மாறுதல்களைப் பெற்றிருந்தன.


5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/72&oldid=1376983" இலிருந்து மீள்விக்கப்பட்டது