பக்கம்:நம் நேரு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

71


தரிடம் நன்மதிப்பும், அவரது ஆற்றலிலும் சேவையிலும் பெருவியப்பும் கொண்டிருந்தார் நேரு.

புரூஸ்ஸல்ஸ் நகரில் கூடிய ‘அமுக்கப்பட்ட தேசீய வாதிகள் காங்கிர'ஸில் இந்தியாவின் பிரதிநிதியாக நேரு சேர்ந்து கொண்டார். சர்வதேசச் சங்க நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்ததுண்டு இவைகளின் மூலம் மேல் நாட்டுத் தொழிலாளவர்க்கத்தினரின் உண்மையான நிலைமை பற்றி அவர் தெளிவாக அறிய முடிந்தது.

1927-ம் வருஷக் கடைசியில் நேரு, தன் குடுப்பத்துடன், கொளும்பு வந்து, அங்கிருந்து சென்னைக்கு விஜயம் செய்தார். அவ் வருஷம் காங்கிரஸ் சென்னையில் கூடியது. உடல் நலத்துடனும் உள்ளத்து நிறைவுடனும் இந்தியா திரும்பியிருந்த நேரு, சுதந்திரம் அயல்நாட்டு உறவு, யுத்த பயங்கரம் முதலியன பற்றிய பல தீர்மானங்களை, சென்னைக் காங்கிரஸின் முன் கொண்டு வந்தார். அவருடைய உற்சாகத்தை எதிர்த்து நிற்க விரும்பாத காங்கிரஸ் அவரது தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றி வைத்ததாம்.

காங்கிரஸ் தலைவர் வற்புறுத்தியதாலும் தான் கொண்டு வந்த தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டிய முக்கியத்தை எண்ணியும், நேரு மீண்டும் காங்கிரஸின் காரியதரிசிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நேரிட்டது. அதன் பிறகு பல வருஷங்கள் வரை பொறுப்பான அந்தப் பதவி அவரை விட்டு விலக மறுத்து விட்டது நேருவின் திறமையான பணியையும் உழைப்பின் ஊக்கத்தையும் கண்டு தலைவர்கள் அவ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/74&oldid=1368250" இலிருந்து மீள்விக்கப்பட்டது