பக்கம்:நம் நேரு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

75


’தியாக மூர்த்தி' என்றும் மனமாற, வாயாற அழைத்து மகிழ்ந்தார்கள் மக்கள். எங்கு சென்றாலும் நேரு ஜனங்களின் வீர வணக்கத்துக்கு இலக்கானார். சாதாரண ஜனங்களும் அவரைப் போற்றினார்கள். படித்தவர்களும் பட்டதாரிகளும் அவரைப் போற்றினார்கள். எதிரிகள் கூட அவரைப் பாராட்டிப் புகழ்ந்து வந்தார்கள். நேரு காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருடைய மதிப்பு மேலும் அதிகமாக உயர்ந்தது.

நேருவையும் அவர் தங்தையாரையும் பற்றிய அளப்புகள் பல சிருஷ்டியாயின. எங்கும் பரவி நிலைத்து வளர்ந்தன. அவற்றிலே ஒன்று “மோதிலால் நேரு ஜவஹர்லால் நேரு இருவரும் தங்கள் உடைகளை பாரிஸ் நகரில் உள்ள லாண்டரி எதற்கோ வாரா வாரம் சலவைக்கு அனுப்புகிருர்கள்; அங்கு அருமையாக வெளுக்கப்பெற்று அவை வருகின்றன” என்பதாம்.

இவ்விஷயமாக நேரு சுய சரிதையில் எழுதி உள்ளது மிகவும் சுவையாக இருக்கிறது. "இச் செய்தியைக் கண்டித்து நாங்கள் மறுப்புரை கூறி வந்தும் பலனில்லே. இந்தக் கதை உயிருடன் உலவுகிறது. இதைப் போன்ற வீண் பிரமையும் அபத்தமுமான எண்ணத்தை என்னால் கற்பனை செய்யக் கூட இயலவில்ல. இவ்வித வீண் ஆடம்பரத்தில் ஈடுபடக்கூடிய மடத்தனம் எவனாவது பெற்றிருப்பானாகில், முட்டாள் தனத்துக்குரிய முதல் பரிசு பெறுவதற்கு அவனே அருகதை உள்ளவன் என்று தான் நான் நினைப்பேன்" என்று கூறுகிறார் நேரு.

இதைப் போலவே நிலைபெற்றுவிட்ட மற்றொரு கதையும் உண்டு. "கேம்பிரிட்ஜில் நேரு கல்வி கற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/78&oldid=1369050" இலிருந்து மீள்விக்கப்பட்டது