பக்கம்:நம் நேரு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

77



1930 ஏப்ரல் ஆறாம் நாள் காந்திஜீ தடியேந்தி தண்டி யாத்திரை செய்து, உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி வைத்தார். அச் செயலும், நாடு முழுவதும் பரவிய சத்தியாக்கிரக நெருப்பும். விளைவுகளும் சரித்திர பிரசித்தமானவை. மக்களின் மனப்பாண்பையும், நாட்டின் நாடியையும், கணிப்பதிலே காந்திஜீ எவ்வளவு வல்லமை பெற்றிருந்தார் என்பதை அவை நிருபித்துவிட்டன. ஜவுளிக்கடை மறியல், உப்பு சத்தியாக்கிரகம் முதலியவைகளில் ஆண்கள் மட்டுமல்ல. பெண்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள்.

ஊர்வலம், தடியடி, மறியல், துப்பாக்கிப் பிரயோகம், தலைவர்கள் கைது-இவை எல்லாம் முடிவற்று நிகழும் அரசாங்கமாக மாறிவிட்டது நாடு. தியாக உணர்வும், சேவா ஊக்கமும் வளர்ந்து ஓங்கின.

இவ் வருஷத்தில் தான் மோதிலால் நேரு அலகாபாத்தில் உள்ள தனது மாளிகையை நாட்டின் பொதுவுடைமையாக்கி, காங்கிரஸிடம் ஒப்புவித்துவிட்டார். அது ‘சுயராஜ்ய பவனம்' என்று பெயர் பெற்றது.

உப்பு சத்தியாக்கிரகம் சம்பந்தமாக நேரு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை கிடைத்தது. அவருடைய தந்தையும், தாயும், சகோதரிகளும். மனைவியும் மறியல்களில் உற்சாகமாகக் கலந்து தொண்டாற்றினர்கள். செல்வச் சூழ்நிலையில் சுகமாக வாழ்ந்த பெண்கள் வெயிலிலும் வெளியிலும் அலைந்து திரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/80&oldid=1369096" இலிருந்து மீள்விக்கப்பட்டது