பக்கம்:நம் நேரு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

81


தது பல ஆபீஸ்களின் அலமாரி மூலைகளிலும் துயில் பயின்று காலம் கழித்திருப்பதும் சாத்தியமே. முடிவில், உற்சாகி எவரோ நேருவின் சரியான விலாசத்திற்கு அதை அனுப்பிவிட்டார். அக்கடிதத்தின் மற்றொரு விசேஷத் தன்மை என்னவென்றால், தந்தை மகனுக்கு எழுதிய பிரிவுபசாரக் கடிதமாக இருந்தது அது. அதிசயிக்க வேண்டிய விஷயம் தான்; இல்லையா?


அத்தியாயம் 10.


காலம் இந்திய சரித்திரத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் சரிதை புதுவிதமாக அமைவதற்குக் காந்திஜீ துணைபுரிந்து வந்தார்.

காந்தி பிரிட்டிஷாருக்கு மட்டும் தான் பெரும் பிரச்னையாகவும் புதிராகவும் விளங்கினார் என்றில்லை. அவருடைய சகாக்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் கூட அவர் அவ்விதமே விளங்கினர். நேருவும் அவரைப் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

காந்திஜீயுடன் சமாதான ஒப்பந்தம் பேசினர்கள் பிரிட்டிஷார். காங்கிரஸைக் குறை கூறினார்கள், காங்கிரஸின் சர்வாதிகாரப் பண்பு புகுந்து விட்டதாகக் குற்றம் சாட்டி, ஜனநாயக மந்திரத்தை உச்சரித்த வாறே எதேச்சாதிகார ஆட்சி புரிந்து வந்தார்கள்.

வைஸ்ராய்கள் வந்தார்கள்; போனார்கள். ஆயினும் பிரிட்டிஷாரின் போக்கிலே மாற்றம் இல்லை.

காந்திஜீ இங்கிலாந்து சென்றார் வட்ட மேஜை மகாநாடு நடந்தது. காந்திஜீ பல மாதங்களுக்குப் பிறகு இங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/84&oldid=1377004" இலிருந்து மீள்விக்கப்பட்டது