பக்கம்:நம் நேரு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

நம் நேரு


தியா திரும்பினார். பிரிட்டிஷ் ஆட்சியினர் தங்கள் வாக்கைக் காப்பாற்றத் தயாராக இல்லை என்பதைக் கண்டார்.

வட்டமேஜை மகாநாடுகள் கூடிக்கூடிக் கலைந்தன. அரசியல் வாதிகள் இந்தியாவில் சிறை அனுபவம் பெற்றுக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆண்டு தோறும் காங்கிரஸ் கூடியது. தீர்மானங்களை நிறைவேற்றியது. தலைவர்கள் மக்களின் போற்றுதலைப் பெற்றார்கள். ஜெயிலிலிருந்து திரும்பி வந்தவர்கள் மாலைமரியாதை விழா வைபவங்களை எல்லாம் சிறப்புற ஏற்றனர்.

நேருஜீ தென்னிந்தியாவில் சுற்றுப்பிரயாணம் செய்தார். இந்தியாவின் முக்கிய நகரங்களில் பிரசாரம் புரிந்தார். மீண்டும் சிறை புகுந்தார். அது 1932-்ல் நடந்தது.

1932 விசேஷ நிகழ்ச்சிகளை வளர்த்து விட்டது. வரிகொடா இயக்கங்களும், சட்ட எதிர்ப்புகளும் தோன்றின. சர்க்கார் ஜனங்களின் வீடுகளையும் இதர உடைமைகளையும் பறிமுதல் செய்யத் துணிந்தனர். காங்கிரஸ் கொடி பறப்பதைத் தடுத்தனர். தடை உத்திரவுகளை வீசினர். ஜெயிலின் கதவுகள் திறந்து அரசியல்வாதிகளை விழுங்கின. இந்தியாவில் போலீஸ் ராஜ்யம்' தான் நிலவியது. ஜெயிலில் சவுக்கடி கொடுப்புது சகஜ மான தண்டனையாயிற்று.

அரசியலாரின் அட்டுழியங்களை எதிர்த்துப் பலர் உண்ணாவிரதம் இருப்பதும் இயல்பாயிற்று. பலவீனங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/85&oldid=1369216" இலிருந்து மீள்விக்கப்பட்டது