பக்கம்:நம் நேரு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

83


களைக் கண்டு சோர்வு ஏற்பட்டது தலைவர்களுக்கு. வெற்றிகளை எண்ணிப் பெருமிதமும் உடனடியாகவே உண்டாயிற்று. உலக நிலைமை படுமோசமாய், பயங்கரமாய், போய்க் கொண்டிருந்தது.

ஜெயிலில் பயங்கரமாய் அனுபவங்களைப் பெற்று வந்தார் நேரு படிக்கவும், எழுதவும், சிந்திக்கவும் அவருக்கு நிறையநிறைய வாய்ப்புக் கிட்டியது. "தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்” என்று பெயர் பெற்ற, சரித்திரத் தொடர்புள்ள, விஷயங்களை நேரு இந்தச் சக்தர்ப்பத்தில் தான் எழுதினார்.

1988 ஆகஸ்டு 30-ம் தேதி-ஒன்றரை வருஷ காலத்திற்கு அதிகமாகவே ஜெயில் அனுபவம் பெற்ற பின்னர்-நேரு விடுதலை அடைந்தார். அரசியல் உலகம் அமைதியுற்றிருந்ததாக உணர்ந்தார். பெருஞ்செயலில் ஈடுபட்டுக் களைத்த சோர்வு அது.

நேரு தீவிரமாகச் செயல் புரிந்து மறுபடியும் ஜெயிலுக்குள் செல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை. கொஞ்ச காலம் வெளியிலிருந்து, குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விரும்பினர். எனினும் எங்காவது முக்கிய ஊர்களுக்குப் போக நேரிட்டால் அங்கெல்லாம் பொதுக் கூட்டங்களில் பேச வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்தது. சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் நேரிட்டது. அவ்வப்போது அரசாங்கம் யார் யாரையோ ஜெயிலுக்குள் தள்ளிக் கொண்டுதான் இருந்தது.

1934 ஜனவரி 15-ம் தேதி பீகாரில் கொடிய பூகம்பம் கோர நடனம் புரிந்தது. அதனால் பாதிக்கப் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/86&oldid=1369232" இலிருந்து மீள்விக்கப்பட்டது