பக்கம்:நம் நேரு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

நம் நேரு


மக்களுக்கு உதவி புரிவதில் நேருவும் ஆர்வம் காட்டினர். பீகாரில் பல இடங்களிலும் திரிந்து. கடுமையாக உழைத்து அலுத்துப் போய் அலகாபாத் வந்து சேர்ந்தார் நேரு. பன்னிரண்டு மணி நேரத் துக்கம் தூங்கினர். அவ்வளவு களைப்பு.

மறுநாள் மத்தியானம் அவருக்கு வாரண்டு வந்து சேர்ந்தது. சரியாக ஐந்து மாதங்களும் பதின்மூன்று நாட்களும்தான் அவர் வெளியே வாழ்ந்தார். மறுபடியும் அரசாங்கம் அவரை ஜெயிலின் அதிதியாக மாற்றிவிட்டது. இம்முறை அவர் கல்கத்தாவைச் சேர்ந்த அலிப்பூர் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு பழைய டேராடூன் சிறையில் சேர்த்தார்கள். அவ்வருஷம் ஆகஸ்டில், பதினோரு தின விடுதலை நேருவுக்குக் கிடைத்தது. நோயினால் அவதியுற்ற கமலாவைக் காண்பதற்காகத் தான் அந்த இடைக்கால விடுதலை. பிறகு நேரு நயினி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதன் பின் அவரை அல்மோரா ஜெயிலில் கொண்டு சேர்த்தனர். அங்குதான் நேரு தனது சுயசரிதையை எழுதினர்.

கொடிய குவெட்டா பூகம்பம் 1935-ம் வருஷம் தோன்றி எவ்வளவோ பாதகம் விளைவித்தது. காங்கிரஸ் தலைவர்கள் எவரையும் அங்கு சென்று மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் அனுமதிக்கவில்லை; காந்திஜீக்குக் கூட தடையுத்தரவு இருந்தது; குவெட்டா பற்றி எழுதிய பல பத்திரிகைகளின் ஜாமீன் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்விஷயங்களே எல்லாம் அறிந்து நேரு பெரிதும் வருந்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/87&oldid=1369246" இலிருந்து மீள்விக்கப்பட்டது