பக்கம்:நம் நேரு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

நம் நேரு


சந்தித்துச் செல்கிற இந்தியத் தலைவர்களின் பெயரைத் தனக்குப் பிர்சார பலமாக ’பாஸ்ட் ஜடாமுனி’ உபயோகித்துக் கொள்வதை நேரு அறிந்திருந்தார். தனது பெயரும் அவ்விதம் பயன்படக் கூடாது என்று அவர் கருதினர். ஆகவே மறுத்து வந்தார்.

என்றாலும், இந்தியாவுக்குத் திரும்புகிற பாதையில் நேரு ரோம் நகரில் ஒருநாள் தாமதிக்க நேர்ந்தது அன்று மாலையில் சந்தித்துப் பேச நேரம் குறித்திருப்பதாக முலோலினி உயர்தர உத்தியோகஸ்தர் மூலம் அழைப்பு அனுப்பினர். நேருவுக்கும் அந்த அதிகாரிக்கும் ஒரு மணி நேரத்துக்கு அதிகமாகவே விவாதம் நடந்தது. நேருவின் சமாதானங்களை அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எனினும், பேட்டிக்காகக் குறிக்கப்பட்ட நேரம் கடந்து போகிற வரையில், ஜவஹர்லால் அந்த அதிகாரியுடன் பேசிக் காலக் கொலை செய்து சர்வாதிகாரியைச் சக்திக்காமலே விமானம் ஏறிவிட்டார்.

உலகத்தில் யுத்தமேகம் கனத்துத் தொங்கியது. ஐரோப்பியாவில் எரிமலை உள்ளுறக் குமைந்து கொதித்துக் கொண்டிருந்தது. ஆபீஸினிய யுத்தம், ஸ்பானிஷ் கலகம். சீனச் சண்டை, பாலஸ்தீனக் குழப்பம் போன்ற விவகாரங்கள் மகாயுத்தத்துககுத் தளம் அமைத்துத் கொண்டிருந்தன.

இந்தியா திரும்பிய நேரு காங்கிரசின் கவனத்தை சர்வதேச திருஷ்டியில் திருப்பினார். துயருற்ற நாடுகளுக்கு அனுதாபங்களும் சிறு சிறு உதவிகளும் அனுப்ப ஏற்பாடு செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/89&oldid=1369271" இலிருந்து மீள்விக்கப்பட்டது